அழிக்கப்பட்டது வெறும் எழுத்துகள் மட்டுமல்ல – ஆதிக்க வெறியரின் ஆணவமும்தான்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.5 திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்திப் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் இத்தகைய செயல் தமிழர் களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்ப்பதாகச் சாடியுள்ளார்.

ஒன்றிய பாஜக அரசு ஹிந்தித் திணிப்பில் எல்லை மீறிச் செல்வதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், “மொழி ஒன்று – வரி வடிவம் மூன்று” என்ற போர்வையில் ஹிந்திப் பெயரையே தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

ஏற்கெனவே வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் ‘பவிஷ்ய நிதி பவன்’ என்றும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தை ‘ஜல் சக்தி’ என்றும் மாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்திலும் இத்தகைய பெயர் மாற்றங்கள் புகுத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

“வாயில் நுழையாத பெயர்கள்”

தற்போது திருச்சி ரயில்வே அலுவலக வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ எனப் பெயர் வைக்கப்பட்டிருப்பதை விமர்சித்த முதலமைச்சர்: “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர். இவர்களின் கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரி யாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்,” என்று கொதித் துள்ளார்.

ஒன்றிய அரசின் ஹிந்தி ஆதிக்க வெறிக்குத் துணை நிற்பவர்களையும் முதலமைச்சர் கடுமையாகச் சாடியுள்ளார். “போலித் தமிழ்ப் பற்று காட்டுபவர்களும், அடிமைத் தனத்தின் அடையாளமாய் நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் மக்களால் அகற்றப்படுவார்கள்” என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், “அகற்றப் பட்டது ஹிந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான். டில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே ‘Out Of Control’ தான்!” எனத் தனது அறிக்கையில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *