சென்னை,ஏப்.13- “சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் மனநிலைக்கு எதிரான செயல்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
2022-2023ஆம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்ட படிப்பில் இரண்டு பாடப் பிரிவுகள் புதியதாக தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் களிடம் பேசிய அவர், “யுனானி மருத்துவம் என்பது மத்திய ஆசிய நாடு களில் இருந்து நமது இந்திய நாட்டிற்கு வந்தது. இந்திய மருத்துவ பிரிவுகளில் இதுவும் ஒன்றாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. சித்தா, ஆயுர் வேதம், யோகா, ஹோமியோபதி, யுனானி என்று பல்வேறு இந்திய மருத் துவ முறைகள் இன்றைக்கு மருத்துவ பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் 1979-ஆம் ஆண்டு இந் திய மருத்துவ முறையில் யுனானிக் கென்று ஒரு தனி கல்லூரி சென்னையில் தொடங்கப்பட்டது.
தொடங்கப்பட்ட நாள்முதல் 26 எண்ணிக்கையில் வரை மட்டுமே இளங்கலை மாணவர்கள் பாடப்பிரிவு இருந்தது. 2016-க்கு பிறகு தற்போது 60 என்கின்ற எண்ணிக்கையில் உயர்த்தப் பட்டிருக்கிறது.
2008ஆம் ஆண்டு 100 படுக்கைக ளுடன் கூடிய உள்நோயாளிகள் பிரிவு ஒன்று அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தொடங் கப்பட்டு இன்று மிகச்சிறப்பாக பயன் தந்து கொண்டிருக்கிறது.
இந்திய மருத்துவத்தை பொறுத்த வரை தமிழ்நாட்டின் செயல்பாடு என்பது கடந்த காலங்களில் மிகச் சிறப் பாக நிரூபனமாகியிருந்தது. அண்மை யில் இந்த துறையின் சார்பில் 11 அழகு சாதனப் பொருள்கள் அறிமுகப்படுத்தப் படும் என்று அறிவிக்கப்பட்டு 6 பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டி ருக்கிறது.
ஏற்கெனவே கரோனா பேரிடர் காலத்தில் சித்த மருத்துவத்தின் சார்பில் கரோனா கேர் சென்டர் உருவாக்கி 1000-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றி ருக்கிறார்கள். அந்த வகையில் வாணியம் பாடியில் நிறுவப்பட்ட யுனானி கரோனா கேர் சென்டர் மிகப்பெரிய அளவில் அந்த பகுதியில் வசிக்கும் இசுலாமிய தாய்மார்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.
சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம்
முதலமைச்சர், சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் இந்தியாவி லேயே முதன் முறையாக தொடங்குவ தற்கு சட்டமன்றத்தில் மசோதா நிறை வேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத் தார்கள். ஒப்புதல் விரைவில் கிடைத்து விடும் என்கின்ற நம்பிக்கையில் அண்ணா நகரில் அதற்கான அலுவல கம் ஒன்று தயார் செய்யப்பட்டது. அந்த அலுவலகத்தின் பணியினை நானும் துறையின் இயக்குநரும் நேரடி யாக ஆய்வு செய்திருந்தோம்.
இந்த நிலையில், மாதவரம் பால் பண்ணையில் 25 ஏக்கர் நிலம் அந்த துறையிடம் இருந்து நில மாற்றம் செய்து சித்த மருத்துவ பல்கலைக் கழகம் கட்டுவதற்கான எற்பாடுகளை செய்திருக்கின்றோம். அதற்கான நிதி ஆதாரம் தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் வசம் இருக்கிறது. இந்த சித்த மருத்துவ பல்கலைக் கழகம் கட்டும் பணி தொடங்க அரசு தயாராக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி ஆளுநருக்கு பதில் அனுப்பப்பட்டு விட்டது. அவர்களுக்கான சந்தேகங்கள் முழுமையாக தீர்ந்து இருக்கும் என்று கருதுகிறோம். எனவே, போன செப்டம் பர் 17ஆம் தேதி அனுப்பி அதற்கு பிறகு இப்போது 6 மாதங்களை கடந்து இருக்கிறது. இன்னமும் கூட அதற்கு ஒப்புதல் தரப்படாத நிலை என்பது இருந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்த மருத்துவத்திற்கு ஆதரவான மன நிலையில் மக்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். சித்த மருத்துவப் பல் கலைக்கழகம் இந்தியாவிலேயே முதன் முறையாக ஒன்று தமிழ்நாட்டில் அமைப்பதற்கு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏகோபித்த ஆதரவை மக்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த மசோதாவை நீண்ட நாள்களாக கிடப்பில் வைத்தி ருப்பது என்பது சித்த மருத்துவத்திற்கு எதிரான ஒரு செயலாகும். தமிழ்நாடு மக்கள் மனநிலைக்கு எதிரான செயலா கவும் இது பார்க்கப்படுகிறது. எனவே, விரைந்து அதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.