ஏழுமலையான் சக்தி இதுதானோ! திருப்பதிக்குச் சென்ற பக்தர்கள் 5 பேர் சாலை விபத்தில் மரணம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பதி, மார்ச் 5 ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.

கருநாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்த மோகன் தாஸ் (வயது 71), நாகராஜு ராவ் (வயது 61), குசுமா (வயது 61), ஜெயந்தி (வயது 59), பூஜா (வயது 33) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று (4.3.2026) அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பெங்களூரு – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பலமனேர் அருகே உள்ள கங்காவரம் மண்டலம் தண்டபல்லி கிராஸ் எனும் இடத்தில், அதிவேகமாக வந்த கார், சிமெண்ட் லோடுடன் கர்னூல் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு கங்காவரம் காவல்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர், காரில் இருந்து 5 பேரின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக பலமனேர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கங்காவரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *