போர் நீடித்து வரும் நிலையில் துபாயில் சிக்கித் தவித்த 217 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர் உறவினர்கள் கட்டியணைத்து வரவேற்றனர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 4– மேற்கு ஆசியாவில் போர் நீடித்து வரும் நிலையில் துபாய், சவுதி அரே பியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் 10 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், துபாயில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக 217 பேர் சென்னை வந்தடைந்துள்ளனர். வான்வெளியின் சூழலை பொறுத்து துபாய் நாட்டின் எமிரேட்ஸ் விமான நிறுவனம் நேற்றிரவு முதல் ஒரு சில விமானங்களை மட்டும் இயக்கி வருகிறது. இந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 217 பேர் இன்று அதிகாலை சென்னை வந்தனர். அவர்களை குடும்பத்தினர் கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இதைபோல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மஸ்கட் விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது. டில்லி, திருச்சி, கொச்சி, கோழிக்கோடு, மும்பையில் இருந்து மஸ்கட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை தொடங்குகிறது. பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி, அய்க்கிய அரபு அமீரகத்துக்கு ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *