ஒன்றிய அரசால் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இரண்டாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும், சமூக மற்றும் அரசியலில் அமைதிப்புரட்சியை ஏற் படுத்தியவரும் பீகார் மாநில மேனாள் முதல மைச்சருமாகிய பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாள் இன்று (13.4.1982).
பி.பி.மண்டல் படத்துடன் 2001ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இரண்டாவது ஆணையத்தின் தலைவர் பி.பி.மண்டல் அவர்களுக்கு சென்னையில் பெரியார் திடலில் வரவேற்பு அளிக்கப் பட்டபோது, அறிக்கை அளிப்பது வரை என் கடமை. அதனை வெளியிடச் செய்து, நடைமுறைப்படுத்துவது திராவிடர் கழகத்தால், ஆசிரியர் கி.வீரமணி அவர் களால் மட்டுமே முடியும் என வெளிப்படையாகவே கூறியவர் பி.பி.மண்டல் ஆவார்.
மண்டல் அறிக்கையை வெளியிடக்கோரியும், அதனை நடைமுறைப்படுத்தக்கோரியும் திராவிடர் கழகம், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 16 போராட் டங்களையும், 42 மாநாடுகளையும் நடத்தி சமூகநீதியை நிலைநாட்டியது வரலாறாகும்.
பிரதமர் பதவியையே துச்சமெனக்கருதி மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியவர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் ஆவார். அதனாலேயே வி.பி.சிங் தலைமையிலான ஒன்றிய அரசை பாஜக கவிழ்த்தது.
மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியதற்கு பின்னரே ஒன்றிய அரசின் துறைகளில் பிற்படுத்தப் பட்டவருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப் பட்டது. அதன்மூலம் சமூக நீதி நிலைநாட்டப்பட்டது.
ஆனாலும், ஆதிக்கபுரியினரின் சூழ்ச்சிகள், சதி வலைகளால் முழுமையாக 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவகுப்பினர் பெற முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக் கிறது.
இன்னமும் இடஒதுக்கீடு குறித்து சர்ச்சையான கருத்துகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறி வரு கிறார்கள். அதேநேரத்தில் அரசமைப்புக்கு விரோத மாக பொருளாதார அடிப்படையைப்புகுத்தி பொருளா தாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீட்டை அவசர கதியில் நடைமுறைப்படுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு சமூக அநீதியை இழைத்து வருகிறது.
சமூகநீதியை நிலைநிறுத்திட, பிற்படுத்தப்பட்ட வர்களின் உரிமைகளை மீட்டெடுத்து, காத்திட அனை வரும் உறுதியேற்கும் நாள் இந்நாள், பி.பி.மண்டல் நினைவு நாள்.