சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. படப்பிடிப்பு!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 3– ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2026இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட் டாஸ் கலந்துகொண்டார்.

இதில், கல்வியில் இடதுசாரி அல்லது வலதுசாரி சித்தாந்தம் என்ற தலைப்பில் ஜான் பிரிட்டாஸ் பேசியதாவது:

“மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி யில் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட 5 துறைகளில் மைல்கல் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இவை இடதுசாரிகளின் அழுத்தத்தால் நடந்து உள்ளது.

கேரளத்தையும் மாநிலங்களையும் ஒப்பிட விரும்பினால், சமூக நிலையில் அடைந்துள்ள சாதனைகளை ஒப் பிட்டுப் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன். குஜராத் ஒரு வளமான மாநிலமாக அறியப்படுகிறது. ஆனால், சமூகரீதியாக அந்த மாநிலம் பின்தங்கியுள்ளது.

குஜராத்தில் பள்ளி இடைநிற்றல் அதிகம். கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சம் 15 ஆயிரமாக இருக்கும். கேரளத்தில் 7 ஆயிரத்து 500 ஆக உள்ளது. இந்த வித்தியாசத்திற்கும் மக்கள் தொகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. குஜராத்தை விட சென்னையில் மக்கள் தொகை அதிகம்.

குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் அமெ ரிக்காவுக்கு ஒரு படி முன்னோடியாக உள்ளது கேரளம். டபுள் என்ஜின் மாநிலமான உத்தரப் பிரதேசத்தை விட சுகா தாரத்தில் கேரளம் மேம் பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் (விபி ஜி ராம் ஜி), பிஎம் சிறீ பள்ளி போன்ற ஒன்றிய அரசின் திட் டங்கள் பெரிதாக மாநிலங் களின் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. கேரளத்தில் உள்ள பள் ளிகள் உலக தரத்திலான பள்ளிகளுடன் போட்டியிடும் தகுதியை ஏற்கெனவே கொண் டுள்ளது.

தொழில் முதலீடு களைக் காட்டிலும் கல்வியிலும் சுகாதாரத்தி லும் அதிக அளவிலான முதலீடுகளை கேரள அரசு செய்து வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *