பேராவூரணி, மார்ச்3- திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம், வை.நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன் (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர் மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார் மேனாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், பேராவூரணி மல்லிகை அச்சக உரிமையாளர் அம்மையாண்டி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் உடல் நலத்குறைவால் மறைவுற்றார்.
மறைந்த மல்லிகை வை.முத்துராமலிங்கம் அவர்களுக்கு 24.2.2026 அன்று கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் தலைமையில் திரா விடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் திரளாக இறுதி மரியாதை செலுத்தினர்.
