புதுடில்லி, ஏப். 13- உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பசுவைக் கொலை செய்தனர் என்று போலியான செய்தியைப் பரப்பி மதக்கலவரத்தை தூண்டி ராம நவமியை முன்னிட்டு வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டவும் சதி செய்ததாக ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட் டனர். இக்கூட்டத்தின் தலைவ னான சஞ்ய ஜா என்பவர் தலை மறைவானார்
தொடர்ந்து பசுமாட்டை இஸ் லாமியர்கள் கடத்துவதாக சமூக வலைதளங்களில் போலிச்செய்தி பரப்பப்பட்டது. இதனால் பெரும்மதக்கலவரம் மூழும் சூழல் ஏற்பட்டது இந்த போலிச் செய் திகளுக்கு பின்னால் ஹிந்து மகா சபாவிற்கு தொடர்பிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித் தனர்
ஹிந்து மகாசபை அமைப்பினர் தாங்களாகவே பசு ஒன்றைக் கொன்று அதன் உடலை ஹிந் துக்கள் அதிகம் உள்ள பகுதிக்கு கொண்டு சென்று வீசியுள்ளனர்.
பிறகு ஆக்ரா காவல் நிலையத் திற்குச்சென்று குற்றவாளிகளான இஸ்லாமியர்களை கைது செய் யுங்கள் என்று கூறி காவல் நிலை யத்திற்கு வெளியே வன்முறைப் போராட்டம் நடத்தினர். மேலும் ஹிந்து மகாசபை அமைப்பைச் சேர்ந்த ஜிதேந்தர் குமார் என்பவர் காவல்துறையிடம் புகாரும் அளித் திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் கடுமை யான பசு வதை தடுப்புச் சட்டம் உள்ளது, இந்த குற்றத்திற்காக அதிகபட்சமாக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
காவல்துறை விசாரணையில் ஹிந்து மகா சபையைச் சேர்ந்த வர்களான பிரிஜேஷ் பதவுரியா, சவுரப் சர்மா, அஜய், சஞ்சய் ஜாத் உள்ளிட்ட 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கும்பலின் தலைவனான முக்கிய சதிகாரராக சஞ்சய் ஜாத்தின் பெயர் வெளிவந்துள்ளது.
இதற்காக வெளிமாநிலத்தில் இருந்து இரண்டு இஸ்லாமியர் களை ஆடுகளை வாங்கிச் செல்லு மாறு கூறி அழைத்து அவர்கள் தான் பசுமாட்டை கொலை செய்ததாக சிக்க வைத் துள்ளனர்
ஹிந்து மகாசபையின் முக்கிய் பதவியில் இருக்கும் சஞ்சய் ஜாத் மிரட்டி பணம் வசூலிக்கும் தொழில் செய்துவருகிறார். நெடுஞ்சாலைகளில் வரும் சரக்கு வாக னங்களுக்கு பாதுகாப்பு கொடுப் பேன், இல்லை என்றால் எது நடந்தாலும் நடக்கலாம் என்று கூறி மிரட்டி பணம் வசூலிக்கும் வேலையையும் ஆட்கடத்தல் உள் ளிட்ட மோசமான சட்டவிரோத செயல்களையும் செய்வதே இவரது தொழில் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்
இது தொடர்பாக ஆக்ரா காவல்துறை ஆணையர் ப்ரீத்திந் தர் சிங், கூறும் போது ராம நவ மியை முன்னிட்டுமதக்கலவரத் தைத் தூண்ட ஹிந்து மகாசபை உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். காவல்துறையின் விரைவான நட வடிக்கையால் பெரிய அளவிலான மதக்கலவரம் தடுக்கப்பட்டுள்ளது
மேலும் பசுமாட்டு உடல் கிடந்த ஹிந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கண்கா ணித்தோம். மேலும் அப்பகுதியில் உள்ள இரவு நேர காவலர்களிடமும் நடத்தியவிசாரணையில் அபகுதி யில் புதிய நபர்கள் நடமாட்ட மில்லை என்பது உறுதியானது. இதனால் புகார் அளித்த ஹிந்து மகாசபையினரிடம் கேட்கவேண்டிய முறையில் விசாரணை செய்த போது உண்மை வெளிவந்தது.
சஞ்சய் ஜாத் யார்?
முதன்மைக்குற்றவாளியான சஞ்சய் ஜாத் மோசமான பல குற்றச்செயல்களைச் செய்தவர். இவர் மீது தெற்கு உத்தரப்பிர தேசத்தின் பல மாவட்ட காவல் நிலையங்களில் புகார்கள் உள்ளது
சமாஜ்வாதி கட்சித் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா ராம் சரித்மனாசுக்கு எதிராகவும் , ஷாருக்கான் நடித்த திரைப்படத் திற்கு எதிரான போராட்டம் நடத்தி திரையரங்கு உரிமையாளர் களி மிரட்டி பணம் பறித்த வழக்கு, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்துத்துவா அய் கான் விநாயக் தாமோதர் சாவர்க் கரின் உருவப்படத்தை நிறுவப் போவதாக மிரட்டினார் .
ஏற்கெனவே இவர் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப் படுகிறது. தாஜ்மஹாலுக்குள் சிவராத்திரியில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட் டார்
தலைமறைவாக இருக்கும் சஞ்சயை கைதுசெய்யக்கூடாது என்று ஹிந்து அமைப்பினர் ஆக்ராவில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.