சென்னை, மார்ச் 3- இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணவும், சாமானிய மக்களுக்கான நீதித்துறை அணுகலை எளிதாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய மண்டல கிளைகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
மண்டல கிளை
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு தனது கெஜட்டில் வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தர கிளைகள் அமையவுள்ளன.
வடக்கு மண்டலம்: புதுடில்லி. தெற்கு மண்டலம்: சென்னை. கிழக்கு மண்டலம்: கொல்கத்தா. மேற்கு மண்டலம்: மும்பை.
புதுடில்லியில் ஒரு தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் செயல்படும். இந்த அமர்வு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்.
எந்தெந்த வழக்குகள் இந்த வரம்பிற்குள் வரும் என்பதைத் தீர்மானிக்கும் தனிப்பட்ட அதிகாரம் இந்திய தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டல கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்.
வழக்குகளை
விரைந்து முடிக்க ஏற்பாடு
இதன் மூலம் தென் னிந்திய மக்கள் டில்லிக்குச் செல்ல வேண்டிய அலைச்சலும், வழக்கிற்கான செலவுகளும் பெருமளவு குறையும்.
தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு (யூனியன் பிரதேசங்கள்) பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகை செய்தல்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் டில்லிக்குச் சென்று வழக்காடுவதில் உள்ள நிதிச் சுமையைக் குறைத்தல். நீதித்துறை நிர்வாகத்தை மக்களுக்கே அருகில் கொண்டு செல்லுதல். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் மூலம் இந்திய நீதித்துறை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.
