இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்! சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளை அமைகிறது! அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 3- இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணவும், சாமானிய மக்களுக்கான நீதித்துறை அணுகலை எளிதாக்கவும் உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய மண்டல கிளைகளை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

மண்டல கிளை

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு தனது கெஜட்டில் வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் நான்கு திசைகளிலும் நிரந்தர கிளைகள் அமையவுள்ளன.

வடக்கு மண்டலம்: புதுடில்லி. தெற்கு மண்டலம்: சென்னை. கிழக்கு மண்டலம்: கொல்கத்தா. மேற்கு மண்டலம்: மும்பை.

புதுடில்லியில் ஒரு தலைமை அரசியல் சாசன அமர்வு மட்டும் செயல்படும். இந்த அமர்வு அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்.

எந்தெந்த வழக்குகள் இந்த வரம்பிற்குள் வரும் என்பதைத் தீர்மானிக்கும் தனிப்பட்ட அதிகாரம் இந்திய தலைமை நீதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமையவுள்ள தெற்கு மண்டல கிளை, உச்ச நீதிமன்றத்தின் முழு அதிகாரங்களுடன் செயல்படும். அரசியல் சாசன வழக்குகள் தவிர்த்த மற்ற அனைத்து மேல்முறையீட்டு வழக்குகளும் இங்கு விசாரிக்கப்படும்.

வழக்குகளை
விரைந்து முடிக்க ஏற்பாடு

இதன் மூலம் தென் னிந்திய மக்கள் டில்லிக்குச் செல்ல வேண்டிய அலைச்சலும், வழக்கிற்கான செலவுகளும் பெருமளவு குறையும்.

தமிழ்நாடு, கேரளா, கருநாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு (யூனியன் பிரதேசங்கள்)  பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வழிவகை செய்தல்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் டில்லிக்குச் சென்று வழக்காடுவதில் உள்ள நிதிச் சுமையைக் குறைத்தல். நீதித்துறை நிர்வாகத்தை மக்களுக்கே அருகில் கொண்டு செல்லுதல். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் மூலம் இந்திய நீதித்துறை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *