சென்னை, ஏப். 13- போலிப்பட்டியல் வணிகம் முடிவுக்கு வரும் என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவா தம் நடைபெற்றது.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி பதிலளித்து பேசுகையில்,போலி வணிக பட்டியல்
“எங்கள் அரசு பொறுப்பேற்ற போது ரூ.95 ஆயிரத்து 209 கோடி யாக இருந்த வணிக வரித்துறையின் வருவாய் 2021-2022ஆம் நிதி ஆண் டில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 970 கோடியாக உயர்ந்துள்ளது. 2022-2023ஆம் நிதி ஆண்டில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 540 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” என்றார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டின் வளர்ச்சி 27.22 விழுக்காடாகும். இந்த வளர்ச்சிக்கு காரணம், வணிக வரித்துறை அலு வலர்கள் மேற்கொண்ட தொடர் தணிக்கை, நமூனா கூர்ந்தாய்வு, நிலுவை வரி வசூல், நுண்ணறிவு பிரிவின் திடீர் ஆய்வு, சுற்றும் படைகளின் சரக்கு வாகன கண் காணிப்பு மற்றும் போலி வணிக பட்டியல் தயாரிப்பதை தடுத்தல் போன்ற தொடர் நடவடிக்கைகள் என்றும் அவர் கூறினார்.
இந்த அரசு பொறுப்பேற்ற போது ரூ.10 ஆயிரத்து 643 கோடியாக இருந்த பத்திரப்பதிவு துறையின் வருவாய் 2021–2022ஆம் நிதி ஆண்டில் ரூ.13 ஆயி ரத்து 913 கோடியாக உயர்ந்தது. 2022–2023ஆம் நிதி ஆண்டில் ரூ.17 ஆயி ரத்து 296 கோடி வருவாய் ஈட்டப் பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் பதிவுத்துறை 24.3 வளர்ச்சி பெற்றுள்ளது. வணிக வரித்துறையில் தரம் உயர்த் தப்பட்ட 1,000 பணி யிடங்களில் 840 பேர் துணை வணிக வரி அலு வலர்களாகவும், 160 பேர் வணிக வரி அலுவலர்களாகவும் விரைவில் பதவி உயர்வு பெற உள்ளனர். இதனால் வரி நிர்வாகம் மேம்படும். அரசுக்கு வரும் வருவாய் உயரும் என்றும் அவர் தெரிவித்தார்.
வழிகாட்டி மதிப்பு சீரமைக்க குழு!
சந்தை மதிப்பு வழிகாட்டியா னது துணைக் குழுக்களின் பரிந் துரை களின் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு முதல் திருத்தி அமைக்கப் பட்டது. எனினும் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாநிலம் முழுவதும் மதிப் பீட்டு குழுவால் ஒரே சீராக 33 விழுக்காடாக குறைக்கப்பட்டது. சொத்துக்களின் சந்தை மதிப்பு காலத்திற்கு ஏற்ப அதிகரித்தும், குறைந்தும் வருகிறது. இது மதிப்பு வழிகாட்டியில் முரண்பாடுகளை உருவாக்குகிறது. எனவே இந்த முரண்பாடுகளை சரி செய்யவும், சரியான சந்தை வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யவும், வழிகாட்டி மதிப்பு சீரமைத்தல் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழு மாநிலம் முழுவதும் சென்று மாவட்ட வாரியாக ஆய் வுகள் நடத்தி அரசுக்கு பரிந்துரை வழங்கும் என்றும் அதனடிப்படை யில் உரிய நடவடிக்கை கள் மேற் கொள்ளப்படும் என்றும் அமைச் சர் மூர்த்தி தெரிவித்தார்.
போலிப்பட்டியல் வணிகம் முடிவுக்கு வரும்!
போலி பட்டியல் வணிகம் என்பது வணிக வரித்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. போலி பட்டியல் வணிகத்தால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவ தோடு நேர்மையாக வணிகம் செய்து வரி செலுத்தும் வணிகர் களின் மன உறுதியையும் அது குலைக்கிறது. துறைசார்பில் நடந்து வரும் திடீர் ஆய்வு களில் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பலரது வங்கிக் கணக்கு களும் சொத்துகளும் முடக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற நட வடிக்கைகளால் தற்போது வரி ஏய்ப்பு குறைந்துள்ளது. இதனால் தீவிர நடவடிக்கை எடுத்து போலி பட்டியல் வணிகத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு உறுதியாக உள்ளது. மோசடி பதிவை தடுக்கவும் மோசடி நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தவும் தவறு செய்பவர்களை எளிதில் கண்டு பிடிக்கவும் ஆவணத்தை தயாரிக் கும் ஆவண எழுத்தாளர்கள் அல் லது வழக்குரைஞர்களின் உரிமை எண் அல்லது பதிவு எண்னை குறிப்பிட்டு கையொப்பம் இடுவ துடன் அவர்களது புகைப்படத்தின் பிம்பத்தையும் ஆவணத்தில் இறுதி பக்கத்தில் அச்சிட அறிவுறுத்தி சுற்றறிக்கைகள் வெளியிடப்பட் டுள்ளது.
சென்னை மண்டலம்
சென்னை பதிவு மண்டலத்தை பிரித்து சென்னை தெற்கு என்ற புதிய பதிவு மண்டலம் விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. தற்போது பெரிய பதிவு மாவட்டங்களான தென் சென்னை, கோவை ஆகியவற்றை பிரித்து முறையே தாம்பரம், கோவை தெற்கு ஆகிய புதிய பதிவு மாவட்டங்கள் விரைவில் ஏற் படுத்தப்பட உள்ளன. வட சென்னை பதிவு மாவட்டத்தில் கொளத்தூரில் புதிதாக சார்பதி வாளர் அலுவலகம் அமைக்கப் படும். சேலம் கிழக்கு, கோபிசெட் டிப் பாளையம், காரைக்குடி, தாம்பரம், கோவை தெற்கு ஆகிய பதிவு மாவட்டங்களில் புதிய தணிக்கை அலகுகள் ஏற்படுத்த அரசாணைகள் வெளியிடப்பட உள்ளன. பொது மக்கள் மற்றும் பதிவு அலுவலர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கூடுதல் இணையதள சேவைகள் வழங்கு வதற்காக ‘ஸ்டார் 3.0’ எனும் மென்பொருள் ரூ.325 கோடி செலவில் உருவாக்கப்படும் என்ற புதிய அறிவிப்புகளையும் அமைச் சர் வெளியிட்டார்.