‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 2 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் 2,58,80,625 போ் பயன்பெற்றுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக அய்.நா. சாா்பில் தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ‘இன்னுயிா் காப்போம் நம்மைக் காப்போம் 48’ திட்டத்தின் மூலம் இதுவரை 5,22,908 பேரின் உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று பொதுமக்களுக்கு பொது மருத்துவம், தோல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்பட 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்ற திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 27.2.2026 வரை 1,256 மருத்துவ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 18,52,561 போ் பயனடைந்துள்ளனா். இந்த முகாம்களில் மட்டும் 50,190 போ் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை புதிதாகப் பெற்றுள்ளனா். மேலும், 60,682 மாற்றுத்திறனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 8,401 பேருக்கு கண்புரை நோய்கள் கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 1,626 பேருக்கு இருதய நோய் பாதிப்பும், 3,877 பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பும், 595 பேருக்கு காசநோய் பாதிப்பும், 1,50,708 பேருக்கு புதிதாக சா்க்கரை நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டது. அவா்கள் மேல் சிகிச்சைகளுக்கான பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *