2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சரவை மற்றும் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
அது ஏன், செயலாளர்களையும், இணைச் செயலாளர்களையும் சேர்த்து கணக்குச் சொன்னார்கள். ஒவ்வொன்றிலும் தனியாக எவ்வளவு பேர் என்று சொல்ல வேண்டாமா?
ஏனெனில், உயர் அதிகாரத்தில் இருக்கும் செயலாளர்கள் விவரம் கடைசியாக 2019-இல் தான் சொல்லப்பட்டது.
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!
இந்த விவரங்களையெல்லாம் மறைப்பதற்காகத் தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் தெளிவான புள்ளிவிவரங்களைத் தர மறுக்கிறார்கள்.
இந்தச் சமூக அநீதிகளையெல்லாம் மூடி மறைக்கத்தான் முயல்கிறார்கள். சரி செய்ய முயலவில்லை.
சமூகநீதிக் காவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறச் சீற்றம் மிகுந்த அறிக்கை ஏன், போராட்ட அறைகூவல் ஏன் என்று இப்போது புரிகிறதா?
இந்திய வரலாற்றில் முதல் முறையாக இடஒதுக்கீட்டுக்குத் தடையில்லை என்ற நிலையை முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மூலமாக நிறுவியவர் தலைவர் தந்தை பெரியார்!
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ‘சுதந்திர’ இந்தியாவில் 46 ஆண்டுகள் கழித்தாவது கிடைத்ததே! அந்த உரிமையைப் போராடி வென்றவர் தமிழர் தலைவர் ஆசிரியர்!
கருப்புச் சட்டைகள் தான் முன்னின்று போராடினோம்! வென்றோம்!
அந்த வெற்றியை முழுமையாக அடைய வேண்டாமா?
வழிகாட்டுகிறார் ஆசிரியர்!
இன்றும் முன் களப் போராளியாக
கொடியேந்திக் களத்திற்கு வருகிறார் – தனது 93 வயதில்!
அணி அணியாய்த் திரள்வோம்!
தமிழ்நாடெங்கும் “பல்லாயிரக்கணக்கில் திரண்டனர் கருப்புடை தரித்த நெருப்புப் பிழம்பென!” என்று வரலாறு எழுதட்டும்!
வாருங்கள் தோழர்களே – களத்தை நோக்கி!
– கருஞ்சிறுத்தை
