
* மாநாட்டில் கழகக் கொடியினைத் தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார். * தந்தை பெரியார், அம்பேத்கர், தேவராஜ் அர்ஸ், எல்.ஜி. ஹாவனூர் ஆகியோரின் படங்களைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். * சமூகநீதிப் போராளி எல்.ஜி. ஹாவனூர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார். உடன்: சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

கருநாடக மாநிலம் சிவாஜி நகர் சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்சத், மேனாள் நீதியரசர் எச்.என். நாகமோகன்தாஸ், பகுத்தறிவு சிந்தனையாளர் பேராசிரியர் கே.எஸ். பகவான், கருநாடக அரசின் மேனாள் தலைமை வழக்குரைஞர் ரவிவர்ம குமார், பேராசிரியர் நரேந்திர நாயக், கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் அகிம்சா, மேனாள் அமைச்சர் லலிதா நாயக், கன்னட வளர்ச்சி ஆணைய மேனாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமைய்யா, கருநாடக அரசின் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மேனாள் தலைவர் எஸ். காந்தராஜ், கருநாடக மாநில தி.மு.க. பொறுப்புக் குழு உறுப்பினர் என்.ராமசாமி, கருநாடக மாநிலத் தலைவர் மு.ஜானகிராமன், மாநில துணைத் தலைவர் குணவேந்தன், மாநில செயலாளர் இரா. முல்லைகோ, கோலார் தங்கவயல் கரிகாலன், கருநாடக மாநில பொருளாளர் கஜபதி, கோவி. நன்னன், அன்னம்மாள், ஊ. ஜெயராமன் மற்றும் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினார்.

அனந்தபுரம் திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் ‘சுயமரியாதை சுடர்’ ஏந்தி வந்தனர். அதனை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

