நாளை (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – சென்னையில் எனது தலைமையில் சமூகநீதியை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள் உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது!

ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி, உரிமைக்குக் குரல் கொடுக்க ஓரணியில் திரளுவோம்!

ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில் ஒடுக்கப்பட்டோர் இடங்கள்  உயர்ஜாதியினருக்குத் ‘தாரை’ வார்க்கப்படுகிறது! ஒன்றிய அரசின் அநீதியை எதிர்த்து கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி, உரிமைக்குக் குரல் கொடுக்க ஓரணியில் திரளுவோம்! நாளை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் – சென்னையில் எனது தலைமையில் சமூகநீதியை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு தழுவிய அறப்போராட்டம் ஏன்?

ஒன்றிய அரசின் சமூக அநீதியைக் கண்டித்து திராவிடர் கழகம் நடத்தும் தமிழ்நாடு தழுவிய நாளைய (3.3.2026) அறப்போராட்டம் ஏன்?

  1. ஒன்றிய அரசின் அதிகாரம் சார்ந்த முக்கிய பதவிகளில், அரசியலமைப்புச் சட்டமும், உச்ச, உயர்நீதிமன்றங்களும் ஒப்புக்கொண்ட, சட்டப்படி நமக்குள்ள இட ஒதுக்கீட்டினைத் தராமல்,

மோடி தலைமையிலான ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு, ஒடுக்கப்பட்ட மக்களைத் தொடர்ந்து வஞ்சித்தே வருவது அதன் வாடிக்கையாகிவிட்டது. அநீதியாக, பார்ப்பனர் முதலிய உயர்ஜாதியினருக்கே ஒடுக்கப்பட்டோர் இடங்களைத் ‘தாரை’ வார்த்து மகிழ்கிறது!

  1. நாட்டு மக்களில் ஒடுக்கப்பட்ட மக்களான S.T., S.C., O.B.C., Minorities (பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், சிறுபான்மை சமூகத்தினர்) ஆகிய மக்கள் தொகையில் மிகப்பெரும்பாலோராக இருப்பவர்களுக்கு உரிய பங்கு, அதிகார வர்க்கத்தில் நீதிபதிகள் நியமனத்தில் மறுக்கப்பட்டே வருகிறது.

இதோ புள்ளி விவரம் – நாடாளுமன்றத்திற்கு வெளியே மிகப்பெருங்கொடுமை பாரீர்!

  1. ஒன்றிய அரசில், அதிகாரப் பங்கீட்டில் (சட்டப்படி) நமக்குள்ள உரிமை –

S.C. – 15%

S.T. – 7.50%

O.B.C. – 27%

முழுமையான விவரங்களை
ஒன்றிய அரசு தர மறுக்கிறது!

  1. ஒடுக்கப்பட்டோரின் பங்கை எடுத்து உயர்ஜாதியினருக்குத் தருவது எப்படி இன்றும் தொடருகிறது என்பதற்கு இதுவரை வெளிவந்துள்ள புள்ளி விவரங்களே சாட்சியமாகும்! முழுமையான விவரங்களை ஒன்றிய அரசு தர மறுக்கிறது!
  2. நாம் கேட்பது பிச்சை அல்ல; சலுகை அல்ல; அரசியலமைப்புச் சட்டப்படி நமக்குள்ள உரிமை.

ஊரறிய, உலகறிய இந்த வஞ்சனை செய்வோரின் சமூகநீதிக்கு இழைக்கப்படும் அக்கிரமத்தை, அநீதியை எதிர்த்து ஓரணியில் திரண்டு வரவேண்டாமா?

கட்சி, ஜாதி, மத வேறுபாடின்றி, உரி மைக்குக் குரல் கொடுக்க ஒன்றாய்த் திரளு வோம்!

என்றும் விழிப்போடு, களத்தில் நிற்போர் நாம்தானே!

‘‘கருப்புச் சட்டைக்காரர்களாகிய நாம்தானே சமூகநீதிப் போராளியாக’’ என்றும் விழிப்போடு, களத்தில் நிற்போர்!

நாளை (3.3.2026) வாருங்கள், சென்னை யில் எனது தலைமையில்தான் இந்த சமூகநீதியை வென்றெடுக்கும் உரிமைப் போராட்டம்!

தமிழ்நாடெங்கும் இந்த உரிமைப் போராட்டம் எழுச்சியோடு நடக்கட்டும்! நடக்கட்டும்!!

வாரீர்! வாரீர்!

சென்னை  தலைவர்,

2.3.2026       திராவிடர் கழகம்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *