- நிகழ்ச்சிகளுக்கு அதிக இளைஞர்கள் வரும் வகையில், கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்படுகிறது.
- மாதத்தில் ஒரு நிகழ்ச்சி கட்டாயம் புதிய இளைஞர்களுக்கான அமர்வாக தனிச் சொற்பொழிவாகவோ கருத்தரங்காகவோ பட்டிமன்றமாகவோ அல்லது வழக்காடு மன்றமாகவோ நடத்துவது என்று முடிவு எடுக்கப்படுகிறது.
- புரட்சிக் கவிஞர் பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தி, ஏப்ரல் மாதத்தில் புரட்சிக் கவிஞர் விழாவை மிகச் சிறப்பான முறையில் நடத்தி அதில் பரிசளிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.
- அன்னை மணியம்மையார் பிறந்த நாளை முன்னிட்டு இயக்க குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை அவரவர் வயதுக்கு ஏற்ப தனித்தனியாக நடத்தி, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் அல்லது நினைவு நாள் நிகழ்ச்சியின்போது பரிசளிப்பது என்று முடிவு எடுக்கப்படுகிறது அதற்கான தனிக்குழுவை நியமிக்கவும் முடிவு செய்யப்படுகிறது.
புதிய பொறுப்பாளர்கள்
நெறியாளர்: புலவர் வெற்றியழகனார்
தலைவர்: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்
துணைத் தலைவர்கள் : கவிஞர் வாசல் எழிலன், எழுத்தாளர் கோ.பிச்சை வள்ளிநாயகம், தங்க. தனலட்சுமி, மா.இராசு
செயலாளர்: பேராசிரியர் தனராசு
துணைச் செயலாளர்கள்: கி.குமார், அரும்பாக்கம் சா.தாமோதரன்
பொருளாளர்: மு.இரா.மாணிக்கம்
செயற்குழு உறுப்பினர்கள்: இராவணன் மல்லிகா, மு.வேலவன், கோ. தட்சணாமூர்த்தி, க.இளவழகன், பொறியாளர் ஆறுமுகம், அயன்புரம் துரைராஜ், தி.ஞானபாலன்
