புதுடில்லி, நவ. 5 – அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ஆவ ணங்கள் இன்றி, சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயன்றதாக 96,917 இந்தியர்களை அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநி லத்தைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2019–2020 ஆம் ஆண்டு டன் ஒப்பிடும்போது அமெரிக்கா வுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித் துள்ளதாகவும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
2019-2020 ஆண்டில் 19,883 இந்தியர்களே சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற தாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக கூறியுள்ளது. இந்த 96,917 இந்தியர்களில் 30,010 பேர் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைய முயன்றுள்ளனர். 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள வர்கள் சட்ட விரோதமாக நுழைந் ததாக அமெரிக்காவிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
உண்மையில் அமெரிக்காவிற் குள் நுழைய முயல்வோரின் எண் ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அதிகாரிகள் கூறு கின்றனர். 10 பேர் நுழைய முயன்றால், அதில் ஒருவர் மட்டும் பிடிபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்ற னர். கடந்த 2022 நிதியாண்டில் (அக்டோபர் – செப்டம்பர்) மட்டும் மொத்தம் 84,000 இந்திய இளை ஞர்கள் அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முன்றுள்ள னர். கைதானவர்களை விசாரித்த தில் பெரும்பாலானவர்கள் இந்தி யாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே காரணமாகத் தெரிவித்துள்ளதாகவும் அதிகாரி கள் கூறியுள்ளனர்.
இப்படி சட்டவிரோதமாக முயல்வோரில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், குடும்ப உறுப்பினர் களுடன் வரும் குழந்தை கள், குழந்தைகள் இல்லாமல் வரும் குடும்பங்கள், முதியவர்கள் என்று கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாக இருக்கிறார்கள். அதன்படி சுமார் 730 குழந்தைகளும் அமெரிக்காவில் சட்ட விரோத மாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.