“100 முறை வந்தாலும் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்” கு.செல்வப்பெருந்தகை காட்டம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 2– தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று (1.3.2026) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மோடியை ஏற்க மாட்டார்கள்

சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையில் எடுப்பதும், மதக்கலவரங்களைத் தூண்டுவதுமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நோக்கம் எனச் சாடிய கு.செல்வப்பெருந்தகை, மக்கள் அமைதியாக வாழ்வதை அவர்கள் விரும்புவதில்லை என்றும், அதன் முகமாகவே பிரதமர் மோடி செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். பிரதமரின் ஆன்மிகப் பயணங்கள் குறித்துப் பேசிய அவர்: “பிரதமர் மோடி நூறு முறை தமிழ்நாடு வந்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவர் திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் சென்றாலும், அவர் செய்த செயல்களுக்காக முருகப்பெருமான் அவரை மன்னிக்க மாட்டார்.”

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மண் பாஜகவுக்கு உகந்த நிலம் அல்ல என்றார். மேலும், தமிழ்நாடு மக்களால் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்ட பாஜக, தற்போது அதிமுக எனும் முகமூடியை அணிந்து கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் உரிமைகளை டில்லியில் அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் பாஜகவும், அதிமுகவும் காலூன்ற ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று கு.செல்வப்பெருந்தகை இந்தச் சந்திப்பில் உறுதியாகத் தெரிவித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *