மகத்தான மனிதநேயம்! விபத்தில் சிக்கி மூளைச் சாவு சட்டக்கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் கொடை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், மார்ச் 2– நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ஸ் தனபாலன். அவரது மகன் விஷால் (21). சட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த பிப். 21ஆம் தேதி, இரவு சுமார் 8.30 மணியளவில் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விஷால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 27ஆம்தேதி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் விஷாலுக்கு மூளைச் சாவு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் மருத்துவர்கள் எடுத்துக்கூறி உடல் உறுப்புகள் கொடை குறித்து விளக்கினர்.

இதையடுத்து உடல் உறுப்புகளை கொடை செய்ய விஷால் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று (1.3.2026) உடல் உறுப்புகளை எடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் நடந்தன. கல்லீரல், இரு சிறுநீரகம், இரு கரு விழிகள் மற்றும் தோல் கொடை கொடுப்பதற்கு எடுக்கப்பட்டன. பின்னர் உடற்கூராய்வு நடந்து, விஷால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த விஷால் உடலுக்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் லியோ டேவிட், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *