தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை!!
சென்னை, மார்ச் 1 உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியேன். தமிழும், தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை என்று முதலமைச்சர் தமது பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73 ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், Dravidian Model-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொ ருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்க ளும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்கு கின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் – நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமி ழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து வெல்வோம் ஒன்றாக!
நலிந்தோர்க்கு உதவி செய்திடுவீர்!
தி.மு. கழகத்தினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
“பிறந்த நாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது – புதிய கொடிகளை ஏற்றி வைப்பது – கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது, கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக குருதிக் கொடை வழங்கல் போன்றவற்றை ஆற்றுவதுமே அவசிய மானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்த கைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்க ளிலும் நிகழுமானால்,அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!
ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்!” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தி.மு. கழகத் தோழர்கள், பொதுமக்கள் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளை ஆடம்பரமின்றிக் கொண்டாடுகின்றனர்.
