வட்டமிடும் கழுகுகளாய்ப் பகைவர் கூட்டம்
வார்த்தைகளால் நெருப்பள்ளி வீசும் போதும்
கட்டமிட்டுக் காய்நகர்த்தி நிதி நிறுத்தி
கைவிரித்துத் திட்டங்களைத் தடுத்த போதும்
மொட்டுகளின் கல்விநலன் கெடுத்த போதும்
முறையற்றே யாரெவரும் நடந்த போதும்
விட்டுவிட்டு வினையாற்றக் கற்றாய் அய்யா!
வேர்அண்ணா, பெரியாரும், கலைஞர் தாமே!
எட்டுதிக்கும் திராவிடத்தை ஏற்றி நின்றே
எம்பெரியார் அண்ணாவின் தடத்தில் சென்றே
கொட்டிநின்ற முரசொலியாம் கலைஞர் போலே
கொட்டுகின்றாய் உம்முழைப்பை
ஸ்டாலின் அய்யா!
தட்டிவைக்க வேண்டியவை தட்டி வைத்தும்
தாய்போலே சீரனைத்தும் தட்டில் வைத்தும்
பட்டுநிகர் சூரியன் போல் பாரனைத்தும்
பார்வையினால் மின்னவைத்தாய்
ஸ்டாலின் அய்யா!!
எட்டவரும் சோதனைக்கும் விடிவு கண்டு
எதிர்த்துவரும் பகையினுக்கும் முடிவு கண்டு
பட்டறிவைப் பகுத்தறிவைப் பாதை யாக்கிப்
பதிப்பீரே மகுடமிங்கே சரித்திரத்தில்!!
தொட்டுவிட்டாய் சிகரமிங்கே! சமூக நீதிச்
சூரியனாய் வாநீயே! தோளில் மாலை
இட்டணைத்தே வாழ்த்துகின்றோம்!!
பெரியார் வாழ்வை
எட்டிமேலும் அகவைதாண்டி வாழ்க நீயே!!
– பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
