முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 73ஆம் ஆண்டு பிறந்த நாள் – தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை – தமிழர் தலைவர் வாழ்த்து

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்  73ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2026) அவர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார்.  தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

*அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்:  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்.

* முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். ‘விடுதலை’சிறப்பிதழை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வழங்கினார். (சென்னை, 1.3.2026)

திராவிடர் கழகம்

* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பான பணியினை பாராட்டி  தமிழர் தலைவர்  வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சென்னை, 1.3.2026)

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *