
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதை வாழ்நாள் நோக்கமாகக் கொண்ட ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2026) அவர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார்.

*அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்.
* முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். ‘விடுதலை’சிறப்பிதழை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வழங்கினார். (சென்னை, 1.3.2026)

* துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறப்பான பணியினை பாராட்டி தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சென்னை, 1.3.2026)
