வளைகுடா நாடுகளில் பதற்றம் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவி எண்கள் அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.1 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிலவரம் குறித்து
முதலமைச்சர் கவலை

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் சூழலால் ஈரான், அய்க்கிய அரபு அமீரகம் (UAE), குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இது குறித்து தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், அங்குள்ள தமிழர்களின் பாது காப்பு குறித்துத் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட முன் னேற்பாடுகளைச் செய்துள்ளது:

கண்காணிப்பு: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு அறை: புது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இதற்கெனத் தனிக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது.

தூதரக அறிவுறுத்தல்: இந்தி யத் தூதரகம் வெளியிடும் பாது காப்பு வழிகாட்டுதல்களைத் தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவசர உதவிக்கான எண்கள்

வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்கள் அல்லது தமிழ் நாட்டில் உள்ள அவர்களது குடும் பத்தினர் ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் கீழ்க் கண்ட எண்களைத் தொடர்பு கொள்ள லாம்:

புதுடில்லி கட்டுப்பாட்டு அறை:தொலைபேசி: 011-24193300 வாட்ஸ்அப்: 92895 167122. அயலகத் தமிழர் நலத்துறை: இந்தியாவிற்குள் (Toll Free): 1800 309 3793 வெளிநாட்டிலிருந்து (Missed Call): +91 80 6900 9900 நேரடித் தொடர்பு: +91 80 6900 9901 தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், முடிந்தவரை வீட் டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் வேண்டுமெனத் தமிழர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *