உரிமையோடு எங்களை வரவேற்க – தட்டிக் கொடுக்க – ‘அடுத்த பயணத்திற்கு ஆளாகுங்கள்’ என்று உற்சாகப்படுத்த இங்கே வருகை புரிந்திருக்கின்றார் – இந்தியாவினுடைய முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சராக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய “சமூகநீதிக்கான சரித்திர நாயகர்” மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அவருடைய ஒப்பற்ற உழைப்பைப் பார்க்கும் பொழுது, என்னுடைய அலைச்சல் எல்லாம் பெரிதல்ல. முன்பு, நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய 95 ஆண்டுகால உழைப்பையும் பார்த்து அதற்குப் பிறகு. இப்பொழுது நம் கண்முன்னாலே உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர். அவர் எப்பொழுது தூங்குகிறார். எப்பொழுது ஓய்வெடுக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. இரவு 12:00 மணிக்கு சாலை சரியாகப் போடப்பட்டு இருக்கிறதா என்று பார்க்கிறார். இதற்கு அடிப்படை அவர் கற்றுக்கொண்ட இடம் அப்படி!
புதிதாக சட்டமன்றம் என்று கட்டுகின்ற நேரத்தில், விடியற்காலை 3:30 மணிக்கு அதிகாரிகளை அழைப்பார். அதற்கு முன்பாகவே அவர் அங்கே சென்றுவிடுவார். அதிகாரிகள் பிறகுதான் வேக வேகமாக ஓடிவருவார்கள். அப்படி அருமையாக உழைத்த உழைப்பின் பெயர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.கலைஞர் அவர்களே ‘உழைப்பின் உருவம்’ என்று பாராட்டிய பெருமை இன்றைய முதலமைச்சருக்கு உண்டு.
(25.4.2022 சென்னை பெரியார் திடலில் நீட் எதிர்ப்பு பெரும்பயண நிறைவு விழாவில் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றிய உரையிலிருந்து)
