‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்!
c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது – அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல!
‘‘உன்னால் முடியும்’’ என்று பெரியார் சொன்னதினுடைய விளைவாகத்தான் இந்த சமுதாயத்திலே பெண்கள் சமூக வளர்ச்சியைப் பார்க்கிறோம்!
c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது – அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல!
‘‘உன்னால் முடியும்’’ என்று பெரியார் சொன்னதினுடைய விளைவாகத்தான் இந்த சமுதாயத்திலே பெண்கள் சமூக வளர்ச்சியைப் பார்க்கிறோம்!
சென்னை, பிப். 27 என்ன செய்தார் பெரியார்? என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள். பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல. பெண்ணால் முடியும் – என்னால் முடியும் – தன்னால் முடியும் – பெரியார் சொன்னார், ‘‘உன்னால் முடியும்’’ என்று சொன்னதினுடைய விளைவாகத்தான் இந்த சமு தாயத்திலே பெண்கள் சமூக வளர்ச்சியைப் பார்க்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- ‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்! c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது – அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல! ‘‘உன்னால் முடியும்’’ என்று பெரியார் சொன்னதினுடைய விளைவாகத்தான் இந்த சமுதாயத்திலே பெண்கள் சமூக வளர்ச்சியைப் பார்க்கிறோம்!
- தஞ்சை: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாடு
- ‘‘அறிவு விடுதலை இயக்கம்’’
- முத்தமிழை, முக்கனிகளைப் போல மூன்று புத்தகங்களும் மிக முக்கியமான அறிவாயுதங்கள்!
- மகளிர் எல்லாம், வேடிக்கைக்காக வந்திருக்கிறவர்கள் அல்ல; வேடிக்கை என்பது அவர்களுடைய வாடிக்கை அல்ல!
- நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்!
- ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!’
- சமையலறையில் கரண்டி பிடித்த பெண்களை – காவல்துறையில் பணியாற்ற வைத்தவர் கலைஞர்!
- ஆண் – பெண் இரண்டு பேருக்கும் சம உரிமை உண்டு!
- தந்தை பெரியார் செய்த அறிவுப் புரட்சி!
- ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ, அவ்வளவு கொடுத்தால் போதும்!
- பைத்தியங்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல!
- மூளைக்குக் காவி சாயமேற்றுகிறார்கள்!
- இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழ்நாடு!
தஞ்சை: திராவிடர் கழக மகளிரணி,
மகளிர் பாசறை மாநில மாநாடு
மகளிர் பாசறை மாநில மாநாடு
21.2.2026 அன்று காலை தஞ்சையில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘‘அறிவு விடுதலை இயக்கம்’’
மூன்று புத்தகங்களையும் சேர்த்தால் ரூ.50 தான். இந்த மூன்று புத்தகங்களும் சாதாரணமானவை அல்ல, இவைதான் நம்முடைய திரிசூலம் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பா.ஜ.க.வினர் வேறு திரிசூலத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த திரிசூலம் இருக்கிறதே, அது ஆயுத வேலை. நம்முடைய திரிசூலம் என்பது காகித வேலை – ‘‘அறிவு, அறிவு, அறிவு’’ அறிவுச் சிந்தனை.
சுயமரியாதை இயக்கத்திற்கு மாற்றுப் பெயர் சொல்லவேண்டும் என்றால், என்ன சொல்வீர்கள் என்று கேட்டபோது, தந்தை பெரியார் சொன்னார், ‘‘அறிவு விடுதலை இயக்கம்’’ என்று பெயர் வைக்கலாம் என்றார்.
முத்தமிழை, முக்கனிகளைப் போல மூன்று புத்தகங்களும்
மிக முக்கியமான அறிவாயுதங்கள்!
மிக முக்கியமான அறிவாயுதங்கள்!
இந்த இயக்கத்திற்குப் பெயரே அறிவு விடுதலை இயக்கம். சிறையில் இருக்கக்கூடிய அறிவு. நம்முடைய அறிவு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது – மதங்களால், கடவுளால், மூடநம்பிக்கைகளால், ஸநாதனத்தால். ஆகவே, அதனை விடுதலை செய்வதற்காகப் பிறந்த இயக்கத்திற்குப் பெயர்தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கம். ஆகவே, அந்த இயக்கத்திற்கு இந்த மூன்று புத்தகங்களும் மிக முக்கியமானவை. முத்தமிழைப் போல, முக்கனிகளைப் போல இந்த மூன்று புத்தகங்களும் மிக முக்கியமான அறிவாயுதங்கள்.
எனவே, இந்த அறிவாயுதங்களை நீங்கள் வேகமாக பரப்பினால், அரசியல் ரீதியான விடுதலை கிடைக்கும். அதேபோல சமுதாய ரீதியாக விடுதலை கிடைக்கும். எல்லாவற்றையும் விட பண்பாட்டு அடிப்படையில் அனைத்தும் வரவேண்டும் என்று சொல்லும்போது, இந்தப் புத்தகங்கள் ஏன், எதற்கு? என்று அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கக்கூடிய செய்திகள் மிக்கவை. ஆகவே, இந்த சிறப்பான மாநாட்டினுடைய முத்தாய்ப்பே இந்தப் புத்தகங்கள்.
இந்தத் தஞ்சையில், அய்யா அவர்கள் மறைவுக்குப் பிறகு அன்னை மணியம்மையார் அவர்களுடைய தலைமையில், இயக்கம் வந்தபோதுதான், ஒரு சிறு குழுவினராக – மகளிர் பிரிவு என்று ஆரம்பித்தார். அதற்கு முன்புவரை ‘மகளிர் பிரிவு’ என்று தனியான அமைப்பு இல்லை.
மகளிர் எல்லாம், வேடிக்கைக்காக வந்திருக்கிறவர்கள் அல்ல; வேடிக்கை என்பது அவர்களுடைய வாடிக்கை அல்ல!
அப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கு அதே தஞ்சைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். மிக சிறப்பாக இந்த அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கிறீர்கள். இங்கே வந்திருக்கிற மகளிர் எல்லாம், வேடிக்கைக்காக வந்திருக்கிறவர்கள் அல்ல; வேடிக்கை என்பது அவர்களுடைய வாடிக்கை அல்ல. அது மட்டுமல்ல தந்தை பெரியார் அவர்க ளுடைய உழைப்பு – நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தினுடைய சாதனை என்ன? என்பதற்கு இந்த அரங்கமும், இந்த மேடையும், இங்கே பேசிய நம்முடைய தோழர்கள் – அதாவது பெண்ணிய உரிமைகளைச் சொன்ன தோழர்கள் அத்தனை பேரும்கூட, நூறாண்டு இந்த இயக்கத்தினுடைய வெற்றிக்குச் சிறப்பான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்!
நூறாண்டு வெற்றிக்கு இரண்டு அடையாளம். ஒன்று இந்த அடையாளம்; இன்னொன்றைப் பார்த்து இன்றைக்கு இன எதிரிகள் எல்லாம் திக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான், ஒப்பற்ற நம்முடைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி. அந்த ஆட்சிதான் மீண்டும் அய்ந்தாண்டு காலத்திற்கு என்பதற்கு நாம், நம்முடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்.
இந்த ஆட்சிதானே பெண்களுக்கு உரிமை கொடுக்கிறது என்று, எதிரிகள் இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியை எதிர்க்க முயற்சிக்கின்ற நேரத்தில், தன்னுடைய மதியூகத்தினால், நம்முடைய முதலமைச்சர் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்.
மகளிருக்குப் பெயர் வைப்பதில்கூட இன்றைக்கு சில பேர் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிக் கூட எழுதி இருக்கிறது ‘விடுதலை’. அதைப் படித்தீர்களேயானால் உங்களுக்குத் தெரியும்.
‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!’
மகளிருக்கு உதவித் தொகைகூட கிடைக்கக்கூடாது என்று முயற்சி செய்கிறார்கள். மகளிருக்கு உதவித்தொகை என்ற வார்த்தைகூட – அந்தத் திட்டத்தில் கிடையாது. அதில்தான் சுயமரியாதை இயக்கத்தினுடைய வெற்றி, பெரியாரின் வெற்றி இருக்கிறது. பணம் கொடுப்பதில் இல்லை நண்பர்களே, அதைவிட மிக முக்கியமாக அந்தப் பணத்தை ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தில் இருந்து, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் இருந்து அனுப்புகிறார்களே, அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.’
சமையலறையில் கரண்டி பிடித்த பெண்களை – காவல்துறையில் பணியாற்ற வைத்தவர் கலைஞர்!
முத்தமிழறிஞர் கலைஞர், பெண்களுக்குச் சொத்து ரிமை கொடுத்தார். கலைஞர் பெண்கள் அடுப்படியில் கரண்டியை வைத்துக்கொண்டு, கண்களிலே நீர் வர, அழுது கொண்டு, புகையோடு போராடிய அந்தப் பெண்களுக்கு புகழ் வரக்கூடிய அளவிற்கு, அவர்கள் கையில் இருந்த கரண்டியைத் தூக்கி எறிந்துவிட்டு, துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கிற பெண் என்று காவல்துறையை உருவாக்கினார்.
துப்பாக்கி, மற்றவர்களைக் கொல்வதற்காக அல்ல; வன்முறைக்காக அல்ல; மற்றவர்கள் வன்முறை செய்தால், அவர்களை கட்டுப்படுத்துவதற்காக.
ஆண்களுக்குதான் வீரம், ஆண்களுக்குதான் திறமை, ஆண்கள் தான் ராணுவத் துறையில் இருக்க வேண்டும், ஆண்கள் தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்று இருந்ததை, தந்தை பெரியார் அவர்கள் பொய்யாக்கினார்.
ஆண் – பெண் இரண்டு பேருக்கும்
சம உரிமை உண்டு!
சம உரிமை உண்டு!
மனிதர்களில் ஆண் – பெண் இரண்டு பேருக்கும் சம உரிமை உண்டு; சம வாய்ப்பு உண்டு; சம பலம் உண்டு. சம பலம் உண்டு என்பதே ஆணுக்குத் தெரியாது. பல பேர் ஒப்புக்கொள்வதில்லை.
முதல் கேள்வி என்னவென்றால், பத்து மாதம் சுமந்துகொண்டு, ஒரு குழந்தையைப் பெற்று எடுக்கிறார்களே பெண்கள், இதைவிட பெரிய வீரமும், சகிப்புத் தன்மையும் அவர்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்? இப்பொழுது உறுப்புகள் மாற்றம் எல்லாம் நடைபெற்று வருகிறது. கொஞ்ச நாளைக்கு அதை மாற்றி, ஆண்கள் கொஞ்ச நாள் அந்த வேலையைப் பாருங்கள் என்று சொல்லியிருந்தால், ஆண்களுக்குக் கருத்தரித்து, அவர்கள் ஒரு பத்து மாதம் சுமந்து கொண்டு இருக்கட்டும் என்று சொன்னால், பிறகு எந்த ஆணும் வாய் திறக்கமாட்டார்கள்.
ஏனென்று கேட்டால், அதில் அவ்வளவு சங்கடங்கள் உண்டு. கருதரிப்பதற்குப் பெண்கள், சமைப்பதற்குப் பெண்கள், கூட்டுவதற்குப் பெண்கள், நாங்கள் ஒன்றுமே செய்யமாட்டோம் என்று ஆண்கள் இருக்கிறார்கள். நானும் குற்றவாளிதான், அதில். அதிலொன்றும் சந்தேகமே இல்லை.
தந்தை பெரியார் செய்த
அறிவுப் புரட்சி!
அறிவுப் புரட்சி!
அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பாக ‘திராவிட மாடல்’ ஆட்சி இருக்கிறது. தந்தை பெரியார் செய்த ஓர் அறிவுப் புரட்சி – ஓர் ஆயுதத்தை கூட அவர் தூக்கவில்லை. ஓரிடத்தில் கூட இரத்தம் சிந்தவில்லை. அமைதிப் புரட்சி, அறிவு புரட்சி, அதுதான் தோழர்களே, இந்த அரங்கத்தைப் பார்க்கும்போது அதனுடைய வெளிப்பாடாக இருக்கிறது. இந்த ஆட்சியைப் பார்க்கும்போது அதனுடைய மிகப்பெரிய உருவாக்கமாக தெளிவாகத் தெரிகிறது.
ஒரு சின்ன உதாரணம் சொல்லுகிறேன். இந்த அரங்கத்தில் முதுமையான பெண்கள், இயக்கத்தில் இருக்கக்கூடிய மகளிரை அழைத்துப் பாராட்டினோம். அப்போது குழந்தைகளும் வந்தார்கள். வயதானவர்களை யும் அழைத்துப் பாராட்டி இருக்கிறோம்; அதற்கு முன்பு மேடைக்கு வந்து, ‘செல்ஃபி’ எடுக்கிறோம் என்று வந்தார்கள். செல்ஃபி எடுப்பதற்கு எனக்குக் கூட தெரியாது. அந்தப் பிள்ளைகள் இங்கே வந்து படம் எடுத்தார்கள். இதில் வயது இடைவெளி என்பது இருக்கிறதா? அதுதான் பெரியாருடைய சாதனையாகும்.
ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ, அவ்வளவு கொடுத்தால் போதும்!
எல்லா வயதினரும் இங்கே இருக்கிறீர்கள். ஆகவே, வயது இடைவெளி இல்லை; கொள்கை இடைவெளி இல்லை. தந்தை பெரியார் அவர்கள், பெண்களுக்கு உரிமை என்று, செங்கல்பட்டு மாநாட்டில் அவர் சொல்லும்போது, சிலர், ‘‘பெண்களுக்கு எவ்வளவு உரிமை கொடுக்க வேண்டும்?’’ என்று கிண்டலாகக் கேட்டார்கள். அதற்குப் பெரியார் அவர்கள், கிண்டலாகவே பதில் சொன்னார், ‘‘பெண்களுக்கு ஒன்றும் அதிகமாக நான் கேட்கவில்லை. அதிகம் கொடுக்க வேண்டாம் அவர்களுக்கு, ஆண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ, அவ்வளவு கொடுத்தால் போதும்’’ என்றார்.
இன்றைக்கு எல்லா வகையிலும் சமத்துவம் வந்தாகி விட்டது. 18 வயது என்று சொன்னால், வாக்குரிமை. ஆண்களுக்கு மட்டுமே இருந்த வாக்குரிமையை, முதல் முறையாக பெண்களுக்கு கொடுத்தது யார் தெரியுமா? அமெரிக்காவிலே கூட அதற்குப் பின்னாளில்தான் தான் வந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இங்கிலாந்திலே அதைவிட பின்னாளில்தான் வந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, முதன் முதலில் மகளிருக்கு வாக்குரிமை கொடுத்த இயக்கம், 110 ஆண்டுகளைக் கண்ட நீதிக்கட்சி ஆட்சி, திராவிடர் ஆட்சி, அதுதான் மகளிருக்கு வாக்குரிமை கொடுத்தது.
பைத்தியங்களுக்குத் தேவை
வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல!
வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல!
இன்றைக்கு என்ன சூழ்நிலை? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அதுபோலவே இந்த அரங்கத்தையே நான் பார்க்கிறேன். இந்த அரங்கத்தில் இருக்கிற உதாரணத்தையே சொல்கிறேன். என்ன செய்தார் பெரியார்? என்றெல்லாம் சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள். பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அவர்களுக்குத் தேவை வைத்தி யம் தானே தவிர, பதில் அல்ல.
இந்த அரங்கத்தை நான் பார்க்கிறேன், எல்லையற்ற மகிழ்ச்சியோடு பார்க்கிறேன். ஒரு காலத்தில அடுப்பு ஊதும் பெண்களுக்கு, படிப்பு எதற்கு என்று கேட்டார்கள். இந்த அரங்கத்தைப் பொறுத்து, இங்கே துணைவேந்தர்கள் இருக்கிறார்கள்; கல்லூரி முதல்வர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள் இருக்கிறார்கள். டாக்டர்கள் இருக்கிறார்கள். வழக்குரைஞர்கள் இருக்கிறார்கள். பொது சேவை செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தினுடைய எந்தெந்த பிரிவுகளுக்கு எல்லாம் வாய்ப்பில்லை என்று இருந்ததோ அத்தனைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு இங்கே இருக்கிறார்கள். நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறார்கள்; ஆண்கள் வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒரு காலத்தில் உங்களை எல்லாம் காலம் காலமாக நிற்க வைத்த ஒரு சமூகத்துக்கு நீங்கள் அறிவுறுத்தி இருக்கிறீர்கள். பெண்ணால் முடியும் – என்னால் முடியும் – தன்னால் முடியும் – பெரியார் சொன்னார், உன்னால் முடியும் என்று அழகாக மிக முக்கியமாக எடுத்து அவர்கள் சொன்னதினுடைய விளைவாகத்தான் இந்த சமுதாயத்திலே பெண்கள் சமூக வளர்ச்சியைப் பார்க்கிறோம்.
மூளைக்குக் காவி சாயமேற்றுகிறார்கள்!
அது மட்டுமல்ல, ‘‘அஞ்சு பெண்ணை பெத்தா அரசனும் ஆண்டி’’ என்றெல்லாம் சொன்னார்கள். பெண் குழந்தை பிறந்தாலே, அது ஏதோ ஒரு பெரிய துக்கநாள் வீட்டிலே என்று நினைக்கக்கூடிய அளவிற்கு, மூளைக்கு அந்த அளவுக்கு அவர்கள் சாயம் ஏற்றினார்கள். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையைத் தமிழ் படுத்துவார்கள்; ‘பிரைன் வாஷிங்’ என்று சொல்வார்கள். பிரைனை வாஷ் செய்யவில்லை இங்கே, பிரைனை சாயப்படுத்துகிறான், காவிப் படுத்துகிறான். மூளைக்குச் சாயமேற்றுகிறார்கள். பெண் படித்தால் என்னாகும்? பெண்ணுக்குச் சொத்துரிமை கொடுத்தால் என்னாகும்? என்று சங்கராச்சாரியார் சொன்னைதை நினைவிற்குக் கொண்டுவாருங்கள்.
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்று, ஒன்றிய அரசில் சட்டத் துறை அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த மசோதாவை தோற்கடித்தார்களே, ஏன் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இந்திய அரசிலமைப்புச் சட்டத்தையே உருவாக்கிய ஒருவரால், பெண்ணுக்கு, அதுவும் இந்து சமுதாயத்தின் அங்கம் என்று சொல்லக்கூடிய இந்து பெண்ணுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்று கொண்டு வந்த ஒரு மசோதாவை அவரால் நிறைவேற்ற முடிய வில்லை. பெரியார் அவர்கள், 1929 இல் நடைபெற்ற செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில் அதைத் தீர்மானமாகப் போட்டார். அப்போது 5 வயது குழந்தையாக இருந்தார் கலைஞர்.
இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழ்நாடு!
ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் முதலமைச்சராகி, கோட்டையில் அமர்ந்து பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு, என்று சட்டம் கொண்டு வந்து, இந்தியாவிற்கே வழிகாட்டியது தமிழ்நாடு.
அதற்காக திராவிடர் கழக மகளிரணி, கலைவாணர் அரங்கத்தில் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்கு முதலமைச்சர் கலைஞரை அழைத்து, ‘‘மகளிர் உரிமை காத்த மாண்பாளர்’’ என்று இதே மகளிரணி சிறப்பாகப் பட்டம் கொடுத்தது.
(தொடரும்)
