திருவனந்தபுரம், பிப்.27 ‘‘கேரளாவில் இனிவரும் காலங்களில் புதிதாகத் தொடங்கப் படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு மதம் சார்ந்த பெயர்களைச் சூட்டக் கூடாது’’ என கேரள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் முற்றிலும் மதச்சார்பற்றதாக இயங்குவதை உறுதி செய்வதே இந்த முடிவின் முக்கிய நோக்கமாகும். கல்வி நிலையங்கள் மதம் கடந்து, அனைவருக்குமான சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விதிமுறை எதிர்காலத்தில் தொடங்கப் படவிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்ெகனவே செயல்பாட்டில் இருக்கும் அரசு கல்வி நிறுவனங்களின் பெயர் களில் எந்த மாற்றமும் செய்யப்படாது; அவை தற்போதைய பெயர்களிலேயே தொடர்ந்து இயங்கும்.
சமூக நல்லிணக்கம்
மாணவர்கள் மத்தியில் தொடக்கத்திலிருந்தே மதச்சார்பற்ற சிந்தனையை வளர்க்க இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள அரசின் இந்த முன்னெடுப்பு, இந்தி யாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதிலும், கல்வித் துறையில் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை நிலைநிறுத்துவதிலும் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
