திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், ஆம்பலாப்பட்டு கோவிந்தசாமி ஆகியோரின் மாமனாரும், முனைவர் த.நர்மதா, மறைந்த த.மணிமொழி, த.லதா, த.இங்கர்சால் ஆகியோரின் தந்தையாரும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் நெடுவாக்கோட்டை கிளைக் கழகத் தலைவரும், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலருமான (BDO) பெரியார் பெருந்தொண்டர் தோ.தம்பிக்கண்ணு (வயது 85) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (27-02-2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
இறுதி ஊர்வலம் (27-02-2026) இன்று மாலை 4 மணியளவில் நெடுவாக்கோட்டை அவர்களது இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த தம்பிக்கண்ணு அவர் மறைவால் துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கும் இரங்கலையும், ஆறுதலையும் திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.2.2026
தொடர்புக்கு:
முனைவர் அதிரடி க.அன்பழகன் : 7373743415
த.நர்மதா : 9944850047
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் ஆகியோர்
த. நர்மதா, அதிரடி க.அன்பழகன் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தனர்.
