
தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட ‘ஒன்றிய – மாநில அரசு உறவுகள் குறித்த உயர் மட்டக் குழு’வின் உறுப்பினர்கள் பேராசிரியர்
மு. நாகநாதன், திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி ஆகியோர் அடங்கிய குழு தயாரித்த அறிக்கையின் முதல் பாகத்தை (தமிழ் – ஆங்கிலம் பதிப்புகள்) தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களைச் சந்தித்து வழங்கினர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ. குமரேசன் (சென்னை, 26.2.2026)
