தமிழ்நாடு தேர்தல் முன்னேற்பாடுகள் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.27- தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழுவினர் சென்னை வந்துள்ளனர். இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டப் பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய மனு ஒன்றை அளித்தனர்.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்

இறுதி வாக்காளர் பட்டியலில் வயது விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்றும், பகிர்ந்துகொள்ளப்படும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப் பட்டது. இதனைச் சரி செய்து சீரான பட்டியலை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாக்காளர் விவரங்கள் முறையாகப் பதிவு செய்யப் படாததால், பழைய விவரங்களே தொடர்கின்றன. இதனைச் சரிசெய்யவும், புதிய வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமிக்கவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

ஊடக விளம்பரங்களுக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பித்தால், 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். சந்தேகங்களைத் தீர்க்க உயர் மட்ட குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

தேர்தல் செலவினங்கள்

மாவட்டத்திற்கு மாவட்டம் தேர்தல் செலவு விகிதங்களில் மாறு பாடுகள் உள்ளன. சந்தை விலைக்கு ஏற்ப சீரான வழிகாட்டுதல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

கையேடுகள்

தேர்தல் ஆணையத்தின் கையேடுகள், விதிகள் மற்றும் வழி காட்டுதல்களைத் தமிழில் வெளியிட வேண்டும். இதுதொடர்பான தமிழ் மொழியாக்கத்தை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

தேர்தல் ஆணையக் குழுவினர் இக்கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டாம் நாள் ஆய்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *