கன்னியாகுமரிக்கு ரூ.1,789 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், பிப்.26 நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1,789 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அவர் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்

அப்போது அவர் பேசியதாவது: கன்னியாகுமரியில் குடிநீர்மற்றும் கழிவுநீர் மேலாண்மை:  ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். வளையாற்றிலிருந்து கன்னியாகுமரி நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம் தீட்டப்படும். ரூ.250 கோடி மதிப்பீட்டில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். முளகுமூடு கிறிஸ்தவ கோயில் அதன் பழமை மாறாமல் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை ரூ.9 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்படும்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் குமரி மாவட்டத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்’’ இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *