அ.தி.மு.க.வுக்கே பா.ஜ.க. தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது சி.பி.எம். சண்முகம் கிண்டல்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 26 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.

போற போக்கை பார்த்தால் அ.தி.மு.க.வுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக என்டிஏ கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை  பாஜக மூலம் முயற்சி செய்வோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டெட்’ தேர்வு : மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண் 40 விழுக்காடாக குறைப்பு

சென்னை, பிப்.26  மாற்றுத் திறனாளிகளுக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக குறைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக துறை செயலர் பா.சந்தரமோகன் நேற்று (25.2.2026) வெளியிட்ட அரசாணை: கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினர் 60 சதவீத மதிப்பெண்ணும் (150-க்கு 90), பிசி, பிசி-முஸ்லிம், டிஎன்சி, மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதமும் (150-க்கு 75), எஸ்சி, எஸ்சி-அருந்ததியர், எஸ்டி வகுப்பினர் 40 சதவீதமும் (150-க்கு 60) பெற வேண்டும்

இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானாவில் இருப்பதைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கான டெட் தேர்ச்சி மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்து மதிப்பெண்ணை 40 சதவீதமாக நிர்ணயித்து அரசு ஆணையிடுகிறது.

மேலும் இந்தப் புதிய தேர்ச்சி மதிப்பெண் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட ‘டெட்’ தேர்வுக்கும், கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள ‘டெட்’ தேர்வு அறிவிப்புக்கும் பின்பற்ற அனுமதிக்க படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி மாற்றுத் திறனாளிகள் பிரிவில் புதிதாக தேர்ச்சி பெறுவோர் பட்டியலை (தாள்-1 மற்றும் தாள்-2) ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்ற வழக்கு தொடர்வு துறையில்

அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் வெளியீடு

சென்னை, பிப்.26 குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை – II (Assistant Public Prosecutor Grade-II in Prosecution Department) பதவிக்கான தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 15.02.2026 மு.ப. அன்று கொள்குறி வகை தேர்வாக நடத்தப்பட்டது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில்  24.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள், அதாவது 03.03.2026 அன்று LDIT 60000 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஆன்சர் கி சாலஞ்ச் (Answer key Challenge) என்ற சாளரத்தைப் பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள், வழிமுறைகள் தேர்வாணைய இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளன. அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான  வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்!

புதுடில்லி, பிப்.26 தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்தல் நடைமுறைகள் இன்று (26.2.2026) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன.

வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: பிப்ரவரி 26 (இன்று காலை 11 மணி முதல்) மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 5 மனுக்கள் மீதான பரிசீலனை: மார்ச் 6 மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 9 வாக்குப் பதிவு (தேவையெனில்): மார்ச் 16 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: மார்ச் 16 (மாலை 5 மணி)

பதவிக்காலம் முடியும் உறுப்பினர்கள்: வரும் ஏப்ரல் மாதத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த பின்வரும் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது: திருச்சி சிவா (திமுக) கனிமொழி சோமு (திமுக) என்.ஆர். இளங்கோ (திமுக) அந்தியூர் செல்வராஜ் (திமுக) தம்பிதுரை (அதிமுக) ஜி.கே. வாசன் (தமாகா) இந்தத் தேர்தல் செயல்முறைகளை வழிநடத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

தேர்தல் நடத்தும் அதிகாரி: சாந்தி (கூடுதல் செயலாளர்) உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி: தேன்மொழி (இணைச் செயலாளர்).

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *