லஞ்சப் புகார் துணைவேந்தர் பதவி நீக்கத்தை ரத்து செய்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப். 26– அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர், சம்பந்தப்பட்ட முன்னாள் துணைவேந்தர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான ஆர்.வேல்ராஜ் முறைகேடு புகார் காரணமாக கடந்தாண்டு பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து வேல்ராஜ், பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மேல்முறையீடு செய்தார். இதை ஏற்று இடைநீக்க உத்தரவை ரத்து செய்து கடந்தாண்டு 5.9.2025 அன்று ஆளுநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பதிவாளர் வி.குமரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக 24.2.2026 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரிச்சர்ட்ஸன் வில்சன், வாதிடும்போது, முன்னாள் துணைவேந்தரான வேல்ராஜ் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளின்பேரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் வேல்ராஜுக்கு எதிராக துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மன்றக்குழுவின் விளக்கத்தைக் கோராமல் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நேரடியாக நிர்வாகத்தில் தலையிட்டு இடைநீக்க உத்தரவை ரத்து செய்துள்ளார். இது சட்டவிரோதமாகும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இது தொடர்பாக பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தரப்பிலும், முன்னாள் துணைவேந்தரான ஆர்.வேல்ராஜ் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *