கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.2.2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*வளர்ச்சி இருக்கும் மாநிலத்தில் பாஜக இருக்காது; பாஜக இருந்தால் அங்கு வளர்ச்சி இருக்காது: வன்முறை, வெறுப்பு, பிரிவினை எப்போது நிறுத்துவீர்கள்? இந்த தேர்தல் என்டிஏ vs தமிழ்நாடுதான்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மேற்கு வங்க வாக்காளர்கள் 1.20 கோடி பேருக்கு வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பிடுங்கி விடும், மம்தா எச்சரிக்கை.

*உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்த நிலையில், சர்ச்சைக்குரிய பாட அத்தியாயங்கள் என்சிஇஆர்டி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இனப்படுகொலைக்கு இஸ்ரேல்  நாட்டின் மீது உலகம் முழுவதும் கண்டிக்கப்படும் நேரத்தில், பிரதமர் மோடி விலகி நிற்காமலோ அல்லது ராஜதந்திரத்தையோ தேர்வு செய்யவில்லை, மாறாக இஸ்ரேலை கட்டி அணைத்துக் கொண்டுள்ளார்;  இது பாலஸ்தீனக் கொள்கைக்கு துரோகம் என சிபிஅய் மாநிலங்களவை உறுப்பினர் பி.சந்தோஷ் குமார் கண்டனம்.

தி இந்து:

* என்.சி.இ.ஆர்.டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறை ஊழல்’ பாடம் நீதித்துறையை அவமதிப்பதை ஏற்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.

* விபி-ஜி ரேம் ஜி சட்டத்தின் விவரங்களுக்கான ஆர்டிஅய் மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசு மறுப்பு: புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டமான விக்ஸித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ரேம் ஜி) சட்டம், 2025அய் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு நடத்திய ஆலோசனை களின் விவரங்களை கோரிய தகவல் அறியும் உரிமை (ஆர்டிஅய்) விண்ணப்பத்தை ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதி வர்மா விசாரணைக் குழு மறு சீரமைக்கப்பட்டது: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை மக்களவை செயலகம் மறு சீரமைத்தது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் சிறீவஸ்தவாவுக்குப் பதில் மார்ச் 6 முதல் மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சிறீ சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து நீடிப்பார்கள்.

– குடந்தை கருணா

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *