ஆண்டிமடத்தில் நடைபெற்ற ஒன்றிய கலந்துரையாடல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆண்டிமடம், பிப்.26– அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வணிக வளாகத்தில் 12.2.2026 அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளர் தியாக.முருகன் தலைமை யேற்க, மாவட்ட துணைச் செயலாளர்க. கார்த்திக் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் திலீபன், ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண்டியன், நகரச் செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை,  நகர அமைப்பாளர் டைல்ஸ் பட்டுசாமி ஒன்றிய இளைஞரணித் தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில்,  நகர துணைத் தலைவர் சுந்தரவடிவேல், கவரப்பாளையம் மோகன் அன்னக்காரங்ககுப்பம் தண்டபாணி, ப.சுந்தர மூர்த்தி நாகராஜ், கேசவன், ஆகாஷ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்று இயக்கப் பணிகள் குறித்து கருத்துரையாற்றினர்

தலைமை செயற் குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன் சிறப்புரையாற்றினார்.

சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தந்தை பெரியார் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டு ஜாதி ஒழிப்பு சமூகநீதி உள்ளிட்ட களங்களில் இயக்க கட்டளைகளை ஏற்று தமிழர் தலைவரின் தலைமையில் மாறாத பற்று கொண்டு ஆண்டிமடம் ஒன்றியத் தலைவராக பணியாற்றிய சிலம்பூர் இரா. தமிழரசன் மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது .

ஒன்றிய பாஜக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டிற்கு நிதி ஒதுக் காததையும், புதிய திட்டங்கள் எதையும் அறிவிக் காததையும் இக்கூட்டம் வன்மை யாக கண்டிக்கிறது .

மேலும் மருத்துவத் துணைப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கொண்டு வரும் ஒன்றிய பாஜக அரசு அந்த முயற்சிகளை உடனே கைவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்து கிறது.

புதிய பொறுப்பாளர்கள்

ஒன்றிய தலைவர்: தியாக.முருகன்,  ஒன்றிய செயலாளர்,
கோ.பாண்டியன்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *