நிலக்கோட்டை, பிப்.26- மகளிர்க்கு உரிமைத் தொகை ரூபாய் 5000 வழங்கிய திமுக அரசை பாராட்டி திண்டுக்கல் மகளிர் அணி மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திண்டுக்கல் கழக மாவட்டத்தின் மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், நிலக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள நாடார் வணிக வளாகத்தில் 13.2.2026 மாலை 5.00 மணி அளவில் நடைபெற்றது ..
கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்யலட்சுமி தலைமை தாங்கினார் ..
நிலக்கோட்டை ஒன்றிய மகளிர் அணிப் பொறுப்பாளர் பழனியம்மாள் அவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் ..
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வழிகாட்டுதல் உரை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வத்தலக்குண்டு இந்தியா பெர்டிலைசர்ஸ்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ5000 அளித்த திராவிட மாடல் தி.மு.க அரசை பாராட்டி அந்த மகிழ்ச்சியின் அடையாளமாக திண்டுக்கல் மாவட்ட கழக மகளிர் அணி மகளிர் பாசறை மற்றும் கழகத் தோழர்கள் சார்பாக நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இனிப்புகளுக்கான தொகை ரூ.1500அய் இந்தியன் அக்ரோஸ் உரக்கடை பா.மதிக்கண்ணன் வழங்கினார்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
மு.பூமகி, பூமிகா, மு.சங்கிலி, சமேதன், என்.பால நந்தினி, என்.குகப்பிரியா, என்.அம்பிகா, எம்.சுதேச மித்ரா, கு.பழனியம்மாள், என்.வீரமணி, ஆர்.சாஷ்விதன், எம்.தனலட்சுமி, த.ஜெயப்பிரகாஷ், கோ.ராஜ்குமார், பழ.நாகராஜன், முனியாண்டி, மு.குணசந்தியா, ஜெ.செல்லப்பாண்டியம்மாள், நா.தமிழ் கண்மணி.
கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் முகவரிகளும் கைப்பேசிகளும் பட்டியலிடப்பட வேண்டும்.
மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக கிராமங்கள் தோறும் மற்றும் நகரங்களிலும் துண்டறிக்கை பிரச்சாரம் இந்த காலகட்டத்தில் அதிகம் நடத்தப்பட வேண்டும்
