காரைக்குடி, பிப். 26– காரைக்குடி – இலுப்பைக்குடி சாலையிலுள்ள, “இராமசாமி தமிழ்க் கல்லூரியில் 23.2.2026 அன்று “பெரியார் பேருரையாளர் “புலவர்
ந.இராமநாதன் அறக்கட்டளைச் சொற்பொழி நிகழ்வு நடந்தது.
காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமிதிராவிடமணி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் பெரி.வீரப்பன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் செ.நாகநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். புலவர் உ.தேவதாசு அறிமுகவுரையாற்றினார்.
கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர். அ.அருள்மொழி, “சீரிளமை திறம் வியந்து…” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் தி. செயலெட்சுமி, மாவட்ட கழகத் தலைவர்
ம.கு.வைகறை, மாநில ப.க. துணைச் செயலாளர் முனைவர்.
மு.சு.கண்மணி, மாவட்ட ப.க. தலைவர் செல்வம் முடியரசன், கல்லூரி மேனாள் முதல்வர் மெய்யம்மை, புலவர் இராம.அருச்சுணன், வழக்குரைஞர்.வி. பி. கமல தயாளன், உட்பட புலவர் பட்டப்படிப்பு மாணவ – மாணவியர், தமிழ்ப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
