முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் உளுந்தூர்பேட்டை ஓவிய ஆசிரியர் அரங்க.செல்லமுத்து (வயது 96) வயது மூப்பின் காரணமாக இன்று (26-02-2026) காலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்!
சுயமரியாதைச் சுடரொளி அரங்க.செல்லமுத்துவின் இரு கண்களும் விழிக்கொடை செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை –- பண்ருட்டி சாலை டேனிஷ் மிஷன் பள்ளி அருகில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இன்று மாலை 5 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடை அளிக்கப்படும்.
