பயன்படும் பொருள்களைப் பக்தியால் பாழாக்குவது பகுத்தறிவா? மஞ்சை வசந்தன்

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சாலையில் உடைக்கப்படும் பூசணிக்காய்

பூசணிக்காய் மிகச்சிறந்த பயனுள்ள உணவுப் பொருள். பல உணவுப் பொருள்களைத் தயாரிக்க அது பயன்படுகிறது. பூசணிக்காய் புளிக்குழம்பு சுவைமிக்கது. பூசணிக்காய் மோர்க் குழம்புக்கு மிகச் சிறந்தது. பூசணிக்காயைப் பயன்படுத்தி அல்வா போன்ற இனிப்புகளைச் செய்யலாம். பூசணிக்காயை துண்டு துண்டாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால், அந்த வடகம் ஆண்டு முழுவதும் பயன்படும்.

பூசணிக்காய் மருதுதுவப் பயனும் உடையது. குளிர்ச்சியானது. உடல் சூட்டைத் தணிக்கப் பயன்படும்.

கட்டுரை

இப்படிப் பலப் பயனுடைய பூசணிக்காயை பக்தியின் பெயரால் திருஷ்டி கழிக்கப் பயன்படுத்திப் பாழாக்குகின்றனர். வீடுகளில் கண் திருஷ்டிப் படாமல் இருக்க அதில் படம் வரைந்து கயிற்றில் கட்டி தொங்க வைத்து, பிறகு திருஷ்டி கழிக்க சாலையில் போட்டு உடைக்கின்றனர்.

அப்படி உடைக்கப்படும் பூசணிக்காய் சாலை முழுவதும் சிதறிக் கிடந்து சாலை வழியே நடந்து செல்வோர், சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்களை வழுக்கித் தள்ளி பெரும் விபத்தை ஏற்படுத்துகிறது. சில விபத்துகளில் மண்டை உடைந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.

முதலில் கண்படுதல் என்பதே அறிவியலுக்கு எதிரான சிந்தனை. ஒருவர் கண் பட்டு பாதிப்பு வரும் என்பது அறியாமை. ஒருவர் பார்வைப்பட்டு எந்த மனிதனுக்கும், எந்தப் பொருளுக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் கண் பட்டால் பாதிப்பு வரும் என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில், அந்தக் கண் திருஷ்டியைக் கழிக்க (நீக்க) இப்படிப் பூசணிக்காய் மொம்மைப் பயன்படுத்தப்பட்டு உடைக்கப்படுகிறது.

ஒருவர் பொறாமையோடு மற்றவரைப் பார்ப்பதால், பார்க்கப்படுபவர் பாதிக்கப்படுவார் என்பது எவ்வளவு மடமை, அறியாமை, அறிவுக்கு எதிரான நம்பிக்கையென்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன் பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும், ஆட வேண்டும், பாட வேண்டும், விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முயன்று உருவாக்கி பலர் மத்தியில் தங்கள் பிள்ளைகளின் திறமைகளைக் காட்டுகிறார்கள். பொறாமை உள்ளவர்கள் கண்படும், திருஷ்டிபடும் என்று நம்பி பிள்ளைகளை வீட்டில் முடக்க முடியுமா?

பிள்ளை அழகாக இருக்கிறது. திருஷ்டிபடும் என்பதால் அந்த பிஞ்சு முகத்தில் கருப்பு மையைப் பூசுவது சரியா? பெருமை கொள்ள வேண்டியவற்றை, மூடநம்பிக்கையால் அச்சத்தோடு பார்ப்பது அறிவார்ந்த செயலா? சிந்தித்துப் பாருங்கள்!

கட்டுரை

எலுமிச்சைக் காவு

மருத்துவக் குணமும், சிறந்த உணவுப் பொருளுமான எலுமிச்சை, ஆன்மிகம் சார்ந்த மூடநம்பிக்கைகளால் பெருமளவில், பல வகையில் பாழாக்கப்படுகிறது.

வாகனங்களில் காவு என்ற பெயரில் சக்கரங்களுக்கு அடியில் வைத்து நசுக்கி வீணடிக்கப்படுகிறது. வாகனங்களில் கயிற்றில் கட்டி காயவிடப்படுகிறது. காவு கொடுக்க கத்தியால் அறுத்து வீசப்படுகிறது.

எலுமிச்சை சாறு உடல் நலத்திற்கு மிகவும் உகர்ந்தது. குளிர்பானங்கள தயாரிக்கப் பயன்படுகிறது. எலுமிச்சைச் சோறு சிறந்த உணவாக உண்ணப்படுகிறது. எலுமிச்சைப் பழத்தை அறிந்து ஊறுகாய் போட்டால், உப்பில் போட்டால் ஓராண்டுக்குக் கூட கெடாமல் பயன்படும். தோல் நோய் உள்பட பல நோய்கள் குணமாக எலுமிச்சை பயன்படுத்தப்படுகிறது. உடல் சோர்வு நீக்கி புத்துணர்ச்சித் தர எலுமிச்சைச் சாறு பெரிதும் பயன்படுகிறது.

கட்டுரை

இப்படிப்பட்ட பயன்பாடு உடைய எலுமிச்சையை சூலத்தில் செறுகிறயும், வாகனங்களில் நசுக்கியும் பாழாக்குவது அறிவார்ந்த செயலா? சிந்தித்துப் பாருங்கள்!

சிதறு தேங்காய்

தேங்காய் சிறப்புகள் பல உடைய உணவுப் பொருள் இளநீராகப் பருகலாம், முற்றிய தேங்காய், தேங்காய் சோறு தயாரிக்கப் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் சமைக்க பலகாரங்கள் செய்ய, தலைக்குத் தடவ என்று பலவேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. சட்டினி செய்ய, துவையல் செய்ய, வெல்லத்தோடு சேர்த்து பச்சையாக மென்று துண்ண, கேக் செய்ய என்று பல்வேறு பயன் தரும் தேங்காயைத் தெருவில் உடைத்துப் பாழாக்குவது சரியா? அறிவுடைமையா? சாலையில் சிதறிக் கிடக்கும் தேங்காய் யாருக்கும் பயன்படாமல் காலில் மிதிப்பட்டு, வாகனச் சக்கரங்களில் நசுங்கி ஆன்மிக நம்பிக்கைகளல் பாழாகிறது.

சடங்கு என்ற பெயரில் பல்வேறு பூசைகளுக்கும், வழிபாடுகளுக்கும், தேங்காய் உடைத்து தெருவில் வீசப்பட்டு பாழக்கப்படுகிறது. இது அறிவுக்கு உகந்ததா? இப்படிச் செய்வது அறிவார்ந்த செயலா? ஆழமாய்ச் சிந்தித்துப் பாருங்கள்!

பாலும், தேனும்

பால் குழந்தைகள் முதல் பலருக்கும் பல வகையில் பயன்படும் மிகச் சிறந்த உணவு. தாய்பால் கிடைக்காத நிலையில் குழந்தைகளின் உயிர் காக்கும் உணவாகப் பால் பயன்படுகிறது. பாலைப் பயன்படுத்தி காபி, தேனீர் கடைகள் லட்சக்கணக்கில் இயங்குகின்றன. இதன்மூலம் கோடிக்கணக்கானோர் வாழ்வு பெறுகின்றனர். பால் கோவா, தயிர், வெண்ணெய் என்று பல உணவுப் பொருள்கள் செய்ய பால் தான் மூலப்பொருள்.

கட்டுரை

அதேபோல் தேன் ஓர் உயர்ந்த உணவுப் பொருள். சுவையான உடலுக்குச் சிறந்த முறையில் நலன் தரக்கூடியது. மருந்துகள் தயாரிக்க முதன்முன்மைப் பொருளாகும். சோர்வு நீக்கி உற்சாகம் தரக்கூடியது. வயிற்றுப் புண் ஆற்றக்கூடியது.

இப்படிப்பட்ட பாலையும், தேனையம் அபிஷேகம் என்ற பெயரில் கடவுள் சிலைகளில் ஊற்றி, அதன்மீது நீர் ஊற்றி கழிவு நீரோடு கலந்து விடப்பட்டு வீணடிப்பது அறிவுக்கு உகந்த செயலா?

ஆன்மிகத்தின் பேரால் உண்ண வேண்டிய பாலை ஆற்றில் ஊற்றுவதும், மாட்டின் கழிவான மூத்திரத்தைக் குடிப்பதும் பகுத்தறிவுக்கு உகந்த செயலா?

எண்ணெயால் விளக்கேற்றல்

கோயில், வீடு, நிறுவனங்கள் என்று பல இடங்களில் கடவுள் சிலைகள், படங்கள் இவற்றுக்கு முன் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இதில் உணவுக்குப் பயன்படும் எண்ணெய்களே ஊற்றப்படுகின்றன. நாடு முழுக்கக் கணக்கிட்டால் லட்சக்கணக்கான எண்ணெய் வீணடிக்கப்படுகிறது.

கட்டுரை

மின் விளக்குகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டன. இப்பொழுது மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தபின் எண்ணெய் ளிக்குகள் ஏற்றுவது தேவையற்றது. சம்பிரதாயமாக அதை ஏற்றுவது ஒரு வகையில் அறியாமையே!

எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டாலும் மின் விளக்குகளுக்கும் எரிகின்றன. ஆக, விளக்கு எண்ணெய்கள் வெளிச்சத்திற்காகத் தற்போது ஏற்றப்படாமல் சம்பிரதாயமாக ஏற்றப்படுகினற்ன. இத்தேவையற்றதும் பிரதாயத்ன் லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்பட வேண்டிய எண்ணெய் பாழாக்கப்படுகிறது. அதிலும் கார்த்திகை தீபம் நேரத்தில் லட்சக்கணக்கான எண்ணெய்ப் பாதுகாக்கப்படுகிறது. எனவே, தேவை உணர்ந்த கால மாற்றத்திற்கு ஏற்ப செயல்களைச் செய்ய வேண்டியது அறிவுடைமையாகும்.

தேங்காயை நெருப்பில் போடல்

நாம் முன்னமே குறிப்பிட்டதுபோல் மிகவும் பயனுள்ள தேங்காயை எரிகின்ற நெருப்பிலிட்டு எரிப்பது அறிவுக்கும், மக்கள் நலனுக்கும் உகந்த செயல் அல்ல. அய்யப்பன் கோயில் போன்ற பல இடங்களில் இச்செயல் நடைபெறுகிறது. நெருப்பிலே தேங்காயை போட்டு எரிப்பதால் யாருக்கு என்ன லாபம்? உணவுப் பொருள்தான் பாழாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கட்டுரை

வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்று மிகவும் ஊட்டம் உள்ளது. அப்படிப்பட்ட உடல் நலம் காக்கும் பழத்தை, ஊதுபத்தி செறுகுவதற்கும், திருஷ்ட்டி கழித்து வீதியில் எறிவதற்கும் அதைப் பயன்படுத்துவது அறிவுடைமை செயல் ஆகாது. ஊதுபத்தி அதற்கென்று உரிய கருவியில் செறுகலாம் அல்லது களி மண்ணைப் பிசைந்து அதில் செறுகலாம். அன்மீகம், பக்தி, நம்பிக்கை, நம்பிரதாயம் என்ற பெயரில் உணவுப் பொருள்களைப் பாழாக்காமல், அவற்றை உணவாக மட்டும் பயன்படுததுவதே அறிவுடைமையாகும்.

வேள்வி (யாகம்)

ஆரியப் பார்ப்பனர்களுக்கென்று உரிய அறிவுக்குச் சற்றும் பொருந்தா, பொருளை நாசமாக்குவது செயல்முறை இது விலை உயர்ந்த பட்டாடைகள், உணவு தானியங்கள், விலங்குகள் இவற்றை நெருப்பில் தள்ளிப் பொசுக்கி கடவுளை அழைத்து ஏற்கச் செய்வதே யாகம் எஅல்லது வேள்வி என்று அழைக்கப்படுகிறது

யாகம் செய்து அளிக்கப்படும் ஆகுதியை எந்தக் கடவுளும் ஏற்றதாக ஆதாரம் இல்லை. பொருள்கள் நாசமாவதைத் தவிர கைடக்கும் நன்மை எதுவும் கிடையாது. எனவே, அழிவுக்கும், உண்மைக்கும் ஒத்துவராத இச்செயல். உலக மக்களின் நலனுக்கு எவ்வகையிலும் பயன்டு உடையது அல்ல, அறிவுக்கும் ஏற்புடையது அல்ல-

யாகத்தீயில் நாள் கணக்கில் பல்வேறு பயனுள்ளப் பொருள்களைத் தூக்கி போட்டு எரிப்பது, புகையிலையை பரவ ஏதாவது எந்த வகையில் நன்யாக்கும் இச்செயலை போர்த்திப் புகழ்ந்து பெருமைப்பட்டுக் கொள்வது எப்படி சிறப்புடையதாக, ஏற்படையதாக இருக்க முடியும்?

உடல் நலனுக்குப் பெரிதும் உதவக் கூடிய நெய்யை நாள்கணக்கில் தீயில் ஊற்றிப் பாழாக்குவது எவ்வகையில் சரியாகும்? அந்த நெய்யை மக்களுக்கு வழங்கினால் அவர்கள் உடல் நலம் பாதுகாப்பப்படும். ஏழைக்குக் கிடைக்காத நெய்யை அவர்களுக்கு வழங்கினார், ஆன்மிகம் கூறும் புண்ணியம் அல்லவா? ஏன் சிந்திப்பதில்லை!

உலக நன்மைக்கு யாகம், எதிரிகளை வீழ்த்த யாகம் மழையைப் பெற யாகம், செல்வம் பெற யாகம், நோய் தீர யாகம், குழந்தை பெற யாகம் என்று பல யாகங்களைச் செய்து இயற்கையான பொருள்களை பாழாக்குவத அறிவுக்கு ஏற்புடையதா? சிந்தித்துப் பாருங்கள்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *