திண்டுக்கல்,ஏப்.14– வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல் நகர திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு திண்டுக்கல் வட்டச் சாலை ஆவின் பாலகத்தின் அருகில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு திண்டுக்கல் நகர தலைவர் அ. மாணிக்கம் தலைமை ஏற்றார். திண்டுக்கல் மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை வரவேற் புரை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், மாநில இளைஞரணி துணைச் செயலா ளர் நா.கமல் குமார், மண்டல தலைவர் மு. நாகராஜன் தி.தொ.கா.பேரவை துணைத்தலைவர் தி.க. செல்வம், நத்தம் எம்.ஆர்.பி. செல்லம் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்.
கழக சொற்பொழிவாளர் வழக் குரைஞர் பூவை. புலிகேசி, வைக்கம் போராட்டம் எதற்காக நடந்தது, தந்தை பெரியாரின் வருகைக்கு முன் போராட்டத்தின் நிலை என்ன, பெரியாருக்கு பின் அந்தப் போராட்டம் எப்படி மாறியது, பெரியாருக்கும் வைக்கம் போராட்டத்துக்குமான தொடர்பு போன் றவை குறித்து சிறப்புரையாற்றினார்.
நகரத் துணைத் தலைவர் செபாஸ்டின் சின்னப்பர் நன்றி யுரை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் நகரச் செயலா ளர் த. கருணாநிதி, பழ. இராசேந்திரன், க. சதாசிவம் உள்ளிட்ட கழகத்தினரும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.