மாணவரைக் கொண்டாடிய சென்னைப் பல்கலைக்கழகம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளைப் பற்றிப் பல்வேறு தலைப்புகளில் கழகத் தோழர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய மன்றத்தினர், அறிஞர் குழுக்கள், பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். எனினும், இந்தியாவின் மூத்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம் இத்த கைய முழு நாள் நிகழ்வை நடத்தியது பல்வேறு வகைகளிலும் சிறப்புக்குரி யதாகும்.

4 அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தின் மாணவர் தான் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என்பது எல்லோ ருக்கும் தெரியும். ஆனால், அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவரும் கூட! ஆசிரியர் அவர்கள் பயிலும்போது சென்னை சட்டக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. (அப்போது தனியே சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் இல்லை)

அந்த வகையில், தன் மாணவருக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய பாராட்டு விழா இது!

4 காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 2003-ஆம் ஆண்டு மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. அதற்கு ஈடான சிறப்புகுரியது இந்த நிகழ்ச்சி என்று பார்வையாளர்கள் மகிழ்ந்து பாராட்டி யது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *