வி.எஸ்.டி.ஏ. பிரணாம்பாள் அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் அன்னையாரும், நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்த மறைந்த சுயமரியாதைச் சுடரொளி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் வாழ்விணையருமான பிரணாம்பாள் அவர்கள் (வயது 81) வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (24.2.2026) வேளாங்கண்ணியில் அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாரின் குடும்பமே கொள்கை வழிப்பட்ட – இயக்க வழிப்பட்ட ஒன்றாகும். இயக்கத்தினரை வரவேற்று உபசரிக்கும், கழகத்திற்காகப் பொருள் செலவு செய்யும் –எடுத்துக்காட்டான  குடும்பமாகும்.

அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்து, அரவணைப்பாக இருந்த தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்தம் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் தோழர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை         

25.2.2026 

குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியனிடம் தொலைப்பேசி மூலம் அம்மையாரது மறைவுக்கு இரங்கலும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியனிடம் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினார். இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும். இறுதி நிகழ்வில், தலைமைக் கழகத்தின் சார்பில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் பங்கேற்பார்.  தொடர்புக்கு: 9943505859

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *