நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் அவர்களின் அன்னையாரும், நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்த மறைந்த சுயமரியாதைச் சுடரொளி வி.எஸ்.டி. அழகப்பன் அவர்களின் வாழ்விணையருமான பிரணாம்பாள் அவர்கள் (வயது 81) வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு (24.2.2026) வேளாங்கண்ணியில் அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மறைந்த அம்மையாரின் குடும்பமே கொள்கை வழிப்பட்ட – இயக்க வழிப்பட்ட ஒன்றாகும். இயக்கத்தினரை வரவேற்று உபசரிக்கும், கழகத்திற்காகப் பொருள் செலவு செய்யும் –எடுத்துக்காட்டான குடும்பமாகும்.
அந்தக் குடும்பத்தின் தலைவராக இருந்து, அரவணைப்பாக இருந்த தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்தம் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் தோழர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
25.2.2026
குறிப்பு: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியனிடம் தொலைப்பேசி மூலம் அம்மையாரது மறைவுக்கு இரங்கலும், குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியனிடம் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினார். இன்று மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும். இறுதி நிகழ்வில், தலைமைக் கழகத்தின் சார்பில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார் பங்கேற்பார். தொடர்புக்கு: 9943505859
