கழகத் தலைவர் இரங்கல்
தஞ்சை விளார் பகுதியைச் சேர்ந்த பெருநிலக்கிழாரும், ‘புதிய பார்வை’ ஆசிரியர் மறைவுற்ற ம.நடராசன் அவர்களின் மூத்த சகோதரருமான ம.சாமிநாதன் (வயது 91) நேற்று (24.2.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மறைவுற்றவரின் குடும்பத்த வர்களான திரு.பழனிவேல், திரு.இராமலிங்கம் ஆகியோரிடம் தொலைப்பேசி மூலம் ம.சாமிநாதன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இன்று (25.2.2026) மதியம் 2 மணி அளவில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
