*பழனி திராவிட செல்வனின் மகன் விக்ரம் தமிழ்செல்வன் மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வழக்குரைஞர் சக்திவேல். *தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர் சந்துரு – தஞ்சை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அஞ்சுகம் இணையரின் மகன் திராவிட மணி – அபிராமி ஆகியோரின் மணவிழா 20.2.2026 அன்று நடைபெற்றதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’ நன்கொடையாக ரூ.5,000 வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: குடும்பத்தினர். (தஞ்சை 20.2.2026)

