திருநகேஸ்வரம், பிப். 24- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு பொதுக்கூட்டம் குடந்தை கழக மாவட்டம், திருநாகேஸ்வரத்தில் நகர கழக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பில் 15/02/2026 அன்று சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரியார் பெருந்தொண் டர்கள் அ.மொட்டையன் மற்றும் கு.முரு கேசன் ஆகியோரின் நினைவரங்க மேடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வி. சுவாதிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கழக பொதுக்குழு உறுப்பினர் வழக் குரைஞர் சு. விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட செயலாளர் உள்ளிக்கடை துரைராஜ், ஒன்றிய தலைவர் எம்.என். கணேசன் ஆகி யோர் நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்கள்.
ஒன்றிய துணைத் தலைவர் ந. முருகானந்தம் நகரப் பொறுப்பாளர் தி.க.விஜயகுமார் மாவட்ட மகளிர் அணி செயலாளர் எம். திரிபுரசுந்தரி, தி. மில்லர், ந. காமராஜ் (குடந்தை மாநகர செயலாளர்), நகர பொறுப்பாளர் ந. குரு மூர்த்தி, நகர துணைத் தலைவர் த.அம்பிகாபதி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ந. சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் சீ.தாமரைச் செல்வன், பேரூராட்சி மன்றத் தலைவர் ஜோதி. தாமரைச்செல்வன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் பீ. ரமேஷ், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம், பாபநாசம் ஒன்றிய செயலா ளர் சு. கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் து. சரவணன், ஒன்றிய செய லாளர் ந. ஆசைத்தம்பி, குடந்தை மாநகர தலைவர் க. சிவக்குமார், மகளிர் அணி தோழியர்கள் மு.அறிவு மணி, சங்கீதா நிம்மதி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பெரியார் கண்ணன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். முடிவில் கழக நகர செயலாளர் வீ.திரா விட பாலு நன்றி கூறினார்.
பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே. மெ.மதி வதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர் தனது உரையில்-உலக வரலாற்றில் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்றும் பேசு பொருளாக தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசி வருவதையும்,ஒரு கட்சி, ஒரு அமைப்பு, ஒரு இயக்கம் தளைத்து நிற்க வேண்டும் என்றாலும்,.. தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை உயிர்ப்போடு தந்தை பெரியார் அவருடைய சொற்களை, எழுத்துகளை, பேச்சுகளை, சிந்தனைகளை, தத்துவங்களை, கொள்கை களை – எள்முனை அளவு கூட மாறாமல் காப்பாற்றியும், பாதுகாத்தும் கொண்டிருக்க கூடிய தந்தை பெரியார் அவர்களின் தத்துவ வாரிசு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையே சாரும்… என நன்றியறிதலோடு பாராட்டி பேசினார்.
