கோவை, பிப்.23- கோவையில் நேற்று (22.2.2026) திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “பாஜகவுக்கு எதிராக திமுக ஒரு மாபெரும் ஜனநாயக போரை நடத்தி வருகிறது. திமுக அரசு மக்களுக்கு வாரி வழங்கும் அரசாக திகழ்கிறது. ஆனால், பாஜக அரசு மக்களிடம் பிடுங்கும் ஆட்சியாக இருக்கிறது” என விமர்சித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றினாலே மக்கள் அச்சப்படும் சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
நிலவில் வெடிப்பு!
நிலவில் புதிதாக 1,000 விரிசல்கள் கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகள் அதிர்ச்சி
வாசிங்டன், பிப்.23- அமெரிக்காவை சேர்ந்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் மேற்பரப்பில் புதிதாக 1,114 விரிசல்களைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நிலவில் உள்ள மொத்த விரிசல்களின் எண்ணிக்கை 2,634 ஆக உயர்ந்துள்ளது. நிலவின் உட்புற பகுதி படிப்படியாக குளிர்ச்சியடைந்து வருவதால், அதன் மேற்பரப்பு சுருங்கி இத்தகைய அழுத்தமும் விரிசல்களும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் நிலவின் பரிணாம வளர்ச்சியை புரிந்துகொள்ள பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
