சென்னை, பிப்.23- இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை அய்.அய்.டி, நவீன காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு ‘மேலாண்மை மற்றும் தரவு அறிவியல்’ என்ற புதிய பல்துறை இளங்கலைப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மேலாண்மை கல்வியையும் (Management), தரவு சார்ந்த பகுப்பாய்வையும் (Data Analytics) ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான படிப்பு. இப்பாடத்திட்டத்தை அய்.அய்.டி சென்னையின் மேலாண்மை ஆய்வுகள் துறை (DoMS) வழங்குகிறது. கலப்பின கற்றல் முறை (Hybrid Learning): ஆசிரியர்களின் பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் நேரடி கலந்துரையாடல் மூலம் வகுப்புகள் நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் இந்த படிப்பில் சேர வயது வரம்பு கிடையாது. பின்வருவோர் விண்ணப்பிக்கலாம்: கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றவர்கள்.
டிப்ளமோ முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இரட்டைப் படிப்பு
ஏற்கெனவே ஒரு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது பணியில் இருப்பவர்களும் இப்பாடத்திட்டத்தை ஒரு தனிப் படிப்பாகத் தொடரலாம்.
சேர்க்கை முறை
இரண்டு வழிகளில் மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியும்.
உள்ளகத் தகுதித் தேர்வு
அய்.அய்.டி நடத்தும் தகுதித் தேர்வு மூலம் சேரலாம். ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வெழுதத் தகுதி பெற்ற மாணவர்கள் நேரடியாகச் சேர வாய்ப்புண்டு.
இப்படிப்பை முடிப்பவர்களுக்கு பின்வரும் துறைகளில் பெரும் வாய்ப்புகள் உள்ளன: வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (BFSI) மின் வணிகம் (E-commerce) மற்றும் அய்.டி (IT) துறைகள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறை சுகாதாரம் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2026 வகுப்புகள் தொடக்கம். ஜூன் 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: study.iitm.ac.in/mgஇப்படிப்பிற்கான சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு உதவிகளை சென்னை அய்.அய்.டியின் CODE (Centre for Outreach and Digital Education) அமைப்பு நிர்வகிக்கும். தேர்வுகள் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தியா முழுவதும் உள்ள மய்யங்களில் நேரடியாகவோ அல்லது இணைய வழி மூலமாகவோ நடைபெறும்.
