
வெட்டிக்காடு, பிப்.23-கராத்தேப் போட்டியில் வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை!
வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு படிக்கும் ர.கிருத்திஷ் என்ற மாணவன் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான்.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ச.தர்ஷினி மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடம் பெற்று அரசு நடத்தும் மாநில அளவிலான கபடி குழுவில் விளையாட தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். பரிசு பெற்ற மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரியையையும் பள்ளி தாளாளர் ,முதல்வர், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மனமுவந்து பாராட்டினர்.
