வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி-திராவிட மகளிர் பாசறையின் சார்பில் குடும்ப விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குடியாத்தம், பிப். 22– 15.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு குடியாத்தம் பெரும்படி கிராமத்தில் வெகு சிறப்பான குடும்ப விழா நடைபெற்றது.

இந்த குடும்ப விழாவிற்கு பொதுக்குழு உறுப்பினர் கலை மணி  தலைமை தாங்கினார்.வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ரம்யா இந்த நிகழ்ச்சியில் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

வந்திருந்த கொள்கை உறவுகள் குடும்ப உறவுகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விழா தொடங்கியது. அடுத்து விளையாட்டுப் போட்டிகள் ஆண்களுக்கும் மகளிருக்கும் சிறுவர்களுக்கும் தனித்தனியே நடந்தது.

எல்லோரும் கலந்துகொள்ளக் கூடிய விளையாட்டுகளாகவும் இருந்தது. பின்னர் மதியம் சுவையான உணவு விருந்திற்கு பிறகு  மீண் டும் போட்டிகள் நடை பெற்றது. அனைத்து போட் டிகளிலும் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

இந்தக் குடும்ப விழாவில் சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற் றனர் என்பது சிறப்புக் குரியது.

இந்த நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தவர் மாநில மகளிரணி துணைச்செயலாளர் தேன்மொழி இறுதியில் வேலூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் ராஜகுமாரி வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி  கூறினார். ச.ஈஸ்வரி, இரா. க. அறிவு சுடர், மோ.சாந்தி, தி.அனிதா, அ.ஜெ. ஓவியா, ஷோபனா, சி.லதா, விமலா, லஷ்மி ராஜஸ்வரி, பொன்மொழி, வி.சடகோபன், வி.இ.சிவக்குமார், இர.அன்பரசன், வி.வினாயக மூர்த்தி, சி.சாந்தகுமார், அறிவர சன், கு.இளங்கோவன், நெ.கி.சுப்பிரமணியன்  ந.சந்திர சேகரன், அ. மொ.வீரமணி, தமிழ்ச்செல்வன், தமிழ்தரணி, யுவன், பாண்டியன், சுப்புராஜ், பெரியார்செல்வம், பாண்டியன், எழிலரசன்,  சென்னையில் இருந்து இசையின்பன், பசும் பொன் செந்தில்குமாரி, பெரியார் மாணாக்கன், செல்வி, மாலதி, உத்ரா, நூர்ஜஹான், பழனிச்சாமி, கீதா, தாமோதரன் மற்றும் 60 தோழர்களுக்குமேல் கலந்து கொண்டனர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *